திங்கள், 28 நவம்பர், 2011

25-11-2011 அன்று QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 25-11-2011 அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி. ஹமீதா பானு அவர்கள் "தவிர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "ஆடை அலங்காரங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கசில் 25-11-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 25-11-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (20-வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கசில் 24-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 24-11-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "ஹிஜ்ரத் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தொடர் தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 24 நவம்பர், 2011

மாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு (25-11-2011)

நாள் :    25/11/2011 - வெள்ளிக்கிழமை
        மாலை 7:00 முதல் 8:௦௦ மணி வரை
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ் !!!

இந்த வாரம் 25-11-2011 வெள்ளியன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு :

கடந்த அக்டோபர் மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ். எனவே இதில் வெற்றி பெற்ற சகோதரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுக்கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.


கூடுதல் தகவலுக்கு :

முஹம்மத் இல்யாஸ் (+974-5518 7260)
துணைப்பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்


புதன், 23 நவம்பர், 2011

"உறவுகள் ஓர் அலசல்" பயான் வீடியோ - மௌலவி அன்சார் மஜிதி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 17-11-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சியில், மௌலவி அன்சார் மஜிதி அவர்கள், "உறவுகள் ஓர் அலசல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


"இஸ்லாம் கூறும் மனிதநேயம்" பயான் வீடியோ - மௌலவி முஹம்மத் தமீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 17-11-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சியில், மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" என்ற தலைப்பில் ஆற்றிய பயானை காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

17-11-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 17-11-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள், "உறவுகள் ஓர் அலசல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் (வீடியோ).

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் (வீடியோ).

QITC துணைப் பொருளாளர் இலியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் அப்துல் கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், QITC தலைவர் அஹமத் இப்ராஹீம் அவர்கள் சென்ற மாதம் நடைபெற்ற பெண்களுக்கான அறிவுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

  1. ஆயிஷத் நஸ்மியா
  2. சித்தி ஜுனைதா
  3. சர்மிளா பானு
இவர்களுக்கான பரிசுகள் இம்மாத பெண்கள் சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

மேலும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC இரத்ததான முகாமை பாராட்டி, ஹமத் மருத்துவக் கழகம் "சான்றிதழ்"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

தியாக திருநாளை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும், ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனும் இணைந்து 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது, அனைவரும் அறிந்ததே! 

மேலும் இந்த இரத்ததான முகாமை பாராட்டி, தற்போது ஹமத் மருத்துவக் கழகம் "சான்றிதழ்" வழங்கியுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

கத்தரில் 11-11-2011 அன்று நடைபெற்ற "மாபெரும் இரத்ததான முகாம்"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

 
தியாக திருநாளை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும், ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷனும் இணைந்து 11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது.

ஜும்மா தொழுகைக்குப்பின் மதியம் 2 மணி முதல் நடைபெறுவதாக அறிவித்திருந்த போதிலும், மதியம் 1 மணியிலிருந்தே சகோதரர்கள் ஆர்வத்துடன் வந்து காத்திருந்தார்கள். தோஹா QITC மர்கஸில் இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 150 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கு கொண்ட 137 பேரில் 91 சகோதரரர்கள் தகுதி பெற்று இரத்த தானம் கொடுத்தார்கள். 6 சகோதரிகள் உட்பட 46 பேர் முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் தகுதி பெறாததால் இரத்த தானம் கொடுக்க முடியாமல் போனது.

முதலில் ஹமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் குழுவின் பொறுப்பாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள்  80 பேருக்கு மட்டுமே இரத்தம் சேமிக்க வசதியுள்ளதாக கூறினார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததனால், கூடுதல் ஏற்பாடுகள் செய்யுமாறு QITC சார்பாக மண்டல தலைவர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதனடிப்படையில் கடைசியாக காத்திருந்தவர்களுக்கும் முதல்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதலாக இரத்தம் சேமிக்க தேவைப்படும் உபகரணங்கள் வரவழைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொண்ட அனைவருக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - திருக்குர்ஆன் 5:32

அல்ஹம்துலில்லாஹ்.



திங்கள், 14 நவம்பர், 2011

10-11-2011 அன்று நடைபெற்ற QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 10-11-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி ரிஸ்கான் அவர்கள், "அல்குரானில் அழகிய அறிவுரைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் சமூக பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த ஏராளமான தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 12 நவம்பர், 2011

06-11-2011 கத்தரில் ஈதுல் அதா பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

கத்தரில் 06-11-2011 அன்று ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஹஜ் பெருநாள் குத்பா பேருரை தமிழாக்கம் மற்றும் சகோதர சங்கமம் சிறப்பு நிகழ்ச்சி ஃபனார்  ஆடிடோரியத்தில் ஹஜ் பெருநாள் தொழுகைக்குப்பின் காலை 7:00 மணிக்கு நடைபெற்றது.

மையத்தின் தலைவர் Dr. அஹமத் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள். ஃபனாரின் பிரதிநிதியாக வெளிநாட்டினருக்கான தாவா பிரிவின் மேற்பார்வையாளர் சகோதரர் ஷுவூர் அஹ்மத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.


மண்டலப் பேச்சாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள் குத்பா பேருரை தமிழாக்கமாக "தியாகத்திற்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் (வீடியோ).

பின்னர் மையத்தின் இணைச் செயலாளர் சகோதரர் ஃபக்ருத்தீன் அவர்கள் மையத்தின் செயல்பாடுகளை விளக்கி நன்றியுரையற்றினார்கள்.

இந்த சகோதர சங்கமம் சிறப்பு நிகழ்ச்சியில் 550 க்கும் மேற்பட்ட கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

அல்ஹம்து லில்லாஹ்!






அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு.

அன்பிற்குரிய சகோதர சகோதாரிகளே!

இன்ஷா அல்லாஹ்! வரக்கூடிய 06-11-2011 ஹஜ் பெருநாள் (ஈதுல் அத்ஹா)தினத்தன்று சூக் ஃபலா மற்றும் சூக் வாகிஃபிற்கு அருகிலுள்ள ஃபனார்  ஆடிடோரியத்தில் QITC நடத்தும் குத்பா பேருரை தமிழாக்கம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் மவ்லவி. அன்சார் மஜிதி (மண்டலப்பேச்சாளர் - கத்தர்) அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்.

எனவே தாங்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் திடல் தொழுகை மற்றும் குத்பா எனும் பேருரையை முடித்து விட்டு ஃபனார் ஆடிடோரியத்திற்கு வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும். தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள் தாங்களும், தங்கள் உறவுகளுடனும், நண்பர்களுடனும் ஈதை சிறப்புடன் கொண்டாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பெண்களுக்கு தனி இட வசதியும், ஃபனார் கட்டிடத்திற்கு கீழ் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மேலும் காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகை திடலில் தொழுவது நபிவழி  என்கிற காரணத்தினாலும், அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விதத்தில் குறிப்பாக மாத விலக்கு உள்ள பெண்களும் கலந்துகொள்ள வேண்டும் அதுதான் நபிவழி என்பதாலும் இம்முறை ஃபனார்  ஆடிடோரியத்திற்கு மாற்றப் பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். முன்புபோல் அலி பின் அலி அல் முசல்மானி பள்ளியில் QITC - யின் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தகவலை நம்முடைய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எடுத்து சொல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 10 நவம்பர், 2011

QITC மர்கஸில் 11-11-2011 அன்று "மாபெரும் இரத்ததான முகாம்" - அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அன்பார்ந்த சகோதர-சகோதரிகளே,


தியாக திருநாளை முன்னிட்டு இன்ஷா அல்லாஹ், வரும் வெள்ளிக்கிழமை 11-11-2011, மதியம் 2 மணி முதல் QITC மர்கஸில் "மாபெரும் இரத்ததான முகாம்" நடைபெற இருக்கிறது.

மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

தங்களுடன், உங்கள் நண்பர்களையும் (எந்த மதம் / நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும்) அழைத்து வரவும். பெண்களுக்கு தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வரும் போது, ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவும், ஐ.டீ.கார்டு அல்லது விசா பக்கம் - ஏதெனுமொன்றின் ஒரு நகலும் மறவாமல் கொண்டுவரவும்.

வாகன வசதிக்கு சகோ.காதர் மீரான் அவர்களை 55384932  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு, 44315863 / 55267530 / 66573836 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

"ஒரு மனிதரை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" - திருக்குர்ஆன் 5:32


புதன், 9 நவம்பர், 2011

"தியாகத்திற்குத் தயாராகுவோம்" பயான் வீடியோ - மௌலவி அன்சார் மஜிதி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 06-11-2011 அன்று ஃபனார் ஆடிடோரியத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில், மண்டலப் பேச்சாளர் மௌலவி அன்சார் மஜிதி அவர்கள் "தியாகத்திற்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

"தியாகத்திற்குத் தயாராகுவோம்"


05-11-2011 அன்று நடைபெற்ற அரஃபா தின சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 05-11-2011 சனிக்கிழமை அன்று அரஃபா தின நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் QITC அழைப்பாளர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் நோன்பு திறப்பதற்கு முன்னதாக “தியாகத் திருநாளின் தாத்பரியம்” என்ற தலைப்பில்  சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

தமிழறிந்த இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.