அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
அல்லாஹுவின் அருளால்,
QITC செயற்குழு கூட்டம் QITC மர்கசில் 21/10/2011 வெள்ளி அன்று இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை QITC தலைவர் Dr. அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QITC அழைப்பாளர் மௌலவீ. முஹம்மத் தமீம் MISc அவர்கள், "ஏகத்துவ எழுச்சி" என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் (வீடியோ).
QITC செயலாளர் மௌலவீ. முஹம்மத் அலீ MISc அவர்கள், "கடந்த ரமலான் நிகழ்ச்சிகள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாளும் அவசிய மாற்றங்களும்" குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
QITC துணைப்பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்கள், "தலைமையின் மூலமாக குர்பானி" கொடுத்தல் குறித்த தகவல்களை தெரிவித்தார்கள்.
QITC தலைவர் அவர்கள் "இரத்ததான முகாம்" இன்ஷாஅல்லாஹ் 11-11-2011 அன்று நடக்கவிருப்பதையும், அதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மேலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதின் அவசியத்தையும், மாதாந்திர சந்தா குறித்த உறுப்பினர்களின் வாக்குறுதியையும் விளக்கினார்கள்.
பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. அதற்கு தேவையான விளக்கத்தை QITC செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இறுதியாக, QITC துணைச்செயலாளர் சகோ. சாக்ளா அவர்கள் நன்றியுரை நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!