சனி, 8 அக்டோபர், 2011

தோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 06-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள், "இறைவனை நினப்பதனால் அடையும் பயன்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

QITC அழைப்பாளர் மவ்லவி. அன்சார் அவர்கள், "நரகத்திற்கான ஊடகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தமது உரையில் நாம் நமது நாவை பேணவேண்டும்; மேலும் பிறருக்கு நாம் நாவினால் தீங்கிழைத்தால் அது நம் நன்மைகளை அழித்துவிடும்; அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறித்தினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "தவ்ஹீத்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, அதிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் காண்பித்து அதிலுள்ள அரபி இலக்கணத்தை விளக்கினார்கள்.

QITC துணைச் செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். அப்துல் கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

தாயகத்தில் நமது தலைமை மூலமாக குர்பானி கொடுக்க விருப்பமுள்ளவர்கள் QITC துணைப் பொருளாளர் சகோதரர். முஹமத் இலியாஸ் (Tel: 55187260) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும், மேலும் தங்கள் குழந்தைகளை வியாழக்கிழமை தர்பியா வகுப்பில் சேர்க்க QITC துணைச் செயலாளர் சகோதரர். தஸ்தகீர் (Tel: 66316247) அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.