செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மாதாந்திர பெண்கள் சிறப்பு பயான் நிகழ்ச்சி அழைப்பு

நாள் : 30/09/2011 - வெள்ளிக்கிழமை
நேரம் : இஷா முதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!


மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி தான் இது.

இன்ஷா அல்லாஹ் !!!

இந்த வாரம் 30-09-2011 வெள்ளியன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


குறிப்பு :

கடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்!!. எனவே இதில் வெற்றி பெற்ற சகோதரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுக்கொள்ளும்படி அன்போடு அழைக்கிறோம்.


கூடுதல் தகவலுக்கு :

முஹம்மத் இல்யாஸ் (+974-5518 7260)
துணைப்பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்


ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-09-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1. வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்.
2. நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார்.
3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்.
4. மைதர் பகுதியில் – மௌலவி.முஹம்மது அலீ அவர்கள் உரையாற்றினார்.
5. கர்தியாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
6. லக்தா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-9-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

1. பின் மஹ்மூத் பகுதியில் – மௌலவீ.நிசார் அவர்கள் உரையாற்றினார்கள்.
2. வக்ரா பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோ. லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – மௌலவீ.அன்சார் அவர்கள் உரையாற்றினார்.
5. லக்தா பகுதியில் – மௌலவீ.தமீம் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. மைதர் பகுதியில் – சகோ.யூசுப் அவர்கள் உரையாற்றினார்
8. கர்தியாத் பகுதியில் – சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 19/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. பின் மஹ்மூத் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – மவ்லவி.முஹம்மது தாஹா அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி .முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்ட கிளைகளில் கடந்த 12/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

1. பின் மஹ்மூத் பகுதியில் – மௌலவீ.முஹம்மது தாஹா அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. நஜ்மா பகுதியில் – சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி .முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த கடந்த 05/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,

1. நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்
2. வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4. பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர். எம்.எஸ்.பக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. சனைய்யா 41 வது தெருவில் – மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்
8. மைதர் பகுதியில் – மவ்லவி முஹம்மத் அலிMISc அவர்கள் உரையாற்றினார்
9. கர்தியாத் பகுதியில் – சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 22 / 07 /2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது,
 

1. வாக்ராபகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்
2. நஜ்மா பாகுதியில் – சகோதரர் மவ்லவி முஹம்மத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்
3. புதிய சலதா பகுதியில் – சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்
4. பின் மஹ்மூத் பகுதியில் – சகோதரர் லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
5. லக்தா பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
6. சனைய்யா பகுதியில் – சகோதரர் மவ்லவி அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7. மைதர் பகுதியில் – சகோதரர் மவ்லவி அன்ஸார் மஜ்தி அவர்கள் உரையாற்றினார்
8. கர்தியாத் பகுதியில் – சகோதரர் ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ‘பின் மஹ்மூத்’ ஜும்மா பள்ளியில் கடந்த 13-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “பொய் சாட்சி கூறாதீர் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ‘மோய்தற்’ ஜும்மா பள்ளியில் கடந்த 13-5-11 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.காதர் மீரான் அவர்கள் “ஓதுவோம் வாரீர் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் செனையா – அல்நாசா கேம்பில் கடந்த 6-5-11 அன்று மௌலவி அன்சார் அவர்கள் “கற்போம் செயல்படுத்துவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



சனி, 24 செப்டம்பர், 2011

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் 22-09-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 22-09-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "உம்முல் ஃபதல் (ரலி)"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் சவூதி மர்கஸ் வேண்டுகோளின் படி "கிதாபுத் தவ்ஹீத்" நூலை அடிப்படையாகக்கொண்டு "தவ்ஹீத்" என்ற தலைப்பில் இன்ஷாஅல்லாஹ் 8 வாரங்கள் வியாழக்கிழமைகளில் உரை நிகழ்த்துவார்கள். முதல் உரையில் இந்நூலின் ஆசிரியர் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப் அவர்களைப் பற்றியும், அன்றைய அரபுலகின் நிலையைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

இந்நூலை மறைந்த மவ்லவி அப்துல் ஜலீல் மதனி அவர்களுடன் இணைந்து மவ்லவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த்து குறிப்பிடத்தக்கது.

QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் மவ்லவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

15-09-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15-09-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

QITC அழைப்பாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் "சிறு பாவங்களும், பெரிய இழப்புகளும்" என்ற தலைப்பிலும்,

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் "நாவு நன்மைக்கா? தீமைக்கா?" என்ற தலைப்பிலும்,

 QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "உறவுகள் ஓர் அலசல்" என்ற (தொடர்) தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

QITC துணைப் பொருளாளர் சகோதரர் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC துணைச் செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

சனி, 10 செப்டம்பர், 2011

தோஹா QITC மர்கசில் 08-09-11 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 08-09-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "உம்முல் முன்திர்"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "நபி வழியை பின்பற்றுவோம்" என்ற தொடர் தலைப்பில் தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய துவாக்கள் பற்றி வலியுறுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் பாண்டியன் என்ற முஹம்மத் அவர்களுக்கு QITC சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அச்சகோதரர் தான் சவுதியில் பணிபுரிந்த போதே இஸ்லாத்தைப்பற்றி அறிந்ததாகவும், தன் தாயாரின் நிலைப்பாட்டால் இஸ்லாத்தை தழுவ காலதாமதம் ஏற்பட்டதாகவும், தான் ஊருக்குப் போகும் போது தன் குடும்பத்தினரையும் இஸ்லாத்தின் பால் அழைப்பேன் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை சகோதரர் அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் வாராந்திர அரபி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் 16-09-11 வெள்ளிக்கிழமை முதல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

புதன், 7 செப்டம்பர், 2011

வாராந்திர வியாழன் நிகழ்ச்சி 8-9-11 அன்று முதல் மீண்டும் ஆரம்பம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !

QITC - மர்கசின் வாராந்திர வியாழன் நிகழ்ச்சி !!!

வருகின்ற வியாழன் 8 /09 /2011 - அன்று முதல் நமது மர்கசின் வாராந்திர நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
எனவே அனைத்து சகோதர சகோதரிகளும் வியாழக்கிழமை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .

அன்புடன் ,
مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 44315863