அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 18/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு அல் கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் QITC துணைத் தலைவர் முஹம்மத் ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள் “நன்றி கெட்டவர்கள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “சிந்திக்கத் தூண்டும் வேதம் அல்-குர்ஆன்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இஸ்லாத்தின்மீது ஆர்வம் கொண்ட சகோதரர் மார்டின் லுக் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
QITC அழைப்பாளர் லியாக்கத்தலி அவர்களின் தொடர் பயானிலிருந்து நடத்தப்பட்ட கேள்வி-பதில் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்த சகோதரிகள் M.R.F.ரினோஸா (1), கதீஜத்துல் நூரியா (2) மற்றும் S.ஜீனத்துல் அமீரா (3) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் நடத்திய இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில், போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் (17 பேருக்கு) ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC செயலாளர் தஸ்த்தகீர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.