அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.
அல்லாஹ்வின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக 11/08/2011 வியாழன் இரவு 9:30 மணிக்கு கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
சவுதி மர்கஸ் அழைப்பாளர் முஹம்மத் யூசுஃப் அவர்கள் தலைமையேற்று “ஆடம்பரம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி முஹம்மத் தமீம் MISc அவர்கள் “வருந்திடுவோம் வாருங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சவுதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் “மதியிழந்த பிள்ளைகளும், மனம் குமுறும் பெற்றோர்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் “அறிவுரை தான் வாழ்கையா?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
சிறுவர், சிறுமியர்களுக்கான அறிவுப்போட்டியில் (மனனம் மற்றும் பேச்சுப்போட்டி) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இதை QITC பொதுச்செயலாளர் மௌலவி முஹம்மத் அலி MISc அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் லால்குடியை சார்ந்த சகோதரர் ரிச்சர்ட் அவர்கள் இஸ்லாத்தை தழுவி, அப்துர் ரஷீத் என தன் பெயரை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் செய்ய, QITC பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் சஹர் உணவு பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.