திங்கள், 25 ஜூலை, 2011

கத்தர் QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

கடந்த 22-07-2011 வெள்ளியன்று இரவு 7:00 மணிக்கு QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் QITC துணைத்தலைவர் சகோ.ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
QITC பொதுச்செயலாளர் சகோ.முஹம்மத் அலீ MISc அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு அதன் தற்போதைய நிலையினை விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த தேவையான குழுக்கள் மற்றும் உதவிகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.

மேலும் “ஈதுல் பித்ரா” தர்மத்தின் அவசியத்தை உணர்ந்து அதை முறையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

உம்ரா அழைத்துச் செல்லுதல் மற்றும் உணர்வு வார இதழ் விற்பனை சம்பந்தமாக நிர்வாகத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக ஸஊதி மர்கஸ் அழைப்பாளர் சகோ.அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும், QITC அழைப்பாளர் சகோ.முஹம்மத் தமீம் MISc அவர்கள் “தர்மம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC துணைப் பொதுச்செயலாளர் சகோ. பக்ருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.