இறைவனின் திருப்பெயரால்...
QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 14-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
QITC அழைப்பாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் சபை ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்கள்.
QITC அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் அலி MISc அவர்கள் "பரா அத இரவும், முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சென்ற மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் QITC அழைப்பாளர் லியாக்கத் அலி அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவிலிருந்து ஒர் அறிவுப் போட்டிக்கான கேள்வித்தாள் வழங்கப்பட்டன. இதற்கான விடைத்தாளை எதிர் வரும் 28-07-2011 க்குள் மர்கசில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.