ஞாயிறு, 31 ஜூலை, 2011

கத்தர் QITC மர்கசில் 29-07-11 அன்று பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 29-07-2011 அன்று மாலை 7:00 மணிக்கு துவங்கியது.

 சகோதரி ஷமீனா பேகம் அவர்கள் "ஒரு மூமின் மற்றொரு மூமினுக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி அஷ்ரஃப் நிஷா அவர்கள் “ஜின்களும் வழிகெடுக்கும் ஷைத்தானும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த 13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியில், மாணவி நஜிஹா “நபியை நேசிப்போம்” என்ற தலைப்பிலும், மாணவி அர்ஷதா மர்யம் “பொறுமை” என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 30 ஜூலை, 2011

28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

QITC
மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 28-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு நடைபெற்றது.


பள்ளி மாணவர் முஹம்மத் ஜியாவுதீன், "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். QITC அழைப்பாளர் அன்சார் மஜ்தி அவர்கள் "ரமலானும் ஈமானும்" என்ற தலைப்பிலும், சவூதி மர்கஸ் அழைப்பாளர் அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "சம்பவங்கள் முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரமலான் சிறப்பு “கேள்வி – பதில்”  நிகழ்ச்சியை QITC அழைப்பாளர்கள் முஹம்மத் அலீ MISc மற்றும் முஹம்மத் தமீம் MISc அவர்கள் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

QITC
செயலாளர் M.ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியின் இறுதியாக QITC தலைவர் Dr.அஹமத் இப்ராஹீம் அவர்கள் வரவிருக்கும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றியும், அதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் தருமாறும் அறிவிப்பு செய்தார்கள்.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


திங்கள், 25 ஜூலை, 2011

23-07-2011 கத்தர் ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் அருளால்,
கடந்த 23-07-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "சுபுஹு தொழுகைக்கு சொந்தக்காரர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

கத்தர் QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறைவனின் திருப்பெயரால்...

கடந்த 22-07-2011 வெள்ளியன்று இரவு 7:00 மணிக்கு QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம் QITC துணைத்தலைவர் சகோ.ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
QITC பொதுச்செயலாளர் சகோ.முஹம்மத் அலீ MISc அவர்கள் ரமலான் மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு அதன் தற்போதைய நிலையினை விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த தேவையான குழுக்கள் மற்றும் உதவிகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான செயல்திட்டம் உருவாக்கப்பட்டது.

மேலும் “ஈதுல் பித்ரா” தர்மத்தின் அவசியத்தை உணர்ந்து அதை முறையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

உம்ரா அழைத்துச் செல்லுதல் மற்றும் உணர்வு வார இதழ் விற்பனை சம்பந்தமாக நிர்வாகத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக ஸஊதி மர்கஸ் அழைப்பாளர் சகோ.அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பிலும், QITC அழைப்பாளர் சகோ.முஹம்மத் தமீம் MISc அவர்கள் “தர்மம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC துணைப் பொதுச்செயலாளர் சகோ. பக்ருதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

21-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 21-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



கத்தர் கஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோ. M. ஷாஜஹான் அவர்கள், "உண்மையான இறைநேசர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


 QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் "சுவர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "ரமலான் நோன்பின் நோக்கம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் மற்றும் தஸ்தகிர் இணைந்து நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

16-07-2011 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், கடந்த 16-07-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


 

.இதில் QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் "ரமலான் மாதத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 18 ஜூலை, 2011

14-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 14-07-2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


 QITC அழைப்பாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 QITC அழைப்பாளர் மௌலவி அன்சார் அவர்கள் "இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்" என்ற தொடர் தலைப்பில் சபை ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்கள்.

 QITC அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் அலி MISc அவர்கள் "பரா அத இரவும், முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
  
இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சென்ற மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடை எழுதியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் QITC அழைப்பாளர் லியாக்கத் அலி அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவிலிருந்து ஒர் அறிவுப் போட்டிக்கான  கேள்வித்தாள் வழங்கப்பட்டன. இதற்கான விடைத்தாளை எதிர் வரும் 28-07-2011 க்குள் மர்கசில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 17 ஜூலை, 2011

கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்




அல்லாஹ்வின் அருளால், கடந்த 14-07-2011 வியாழன் அன்று நடந்த கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சியில் கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு மௌலவி அப்துஸ் ஸமத் மதனி அவர்கள் கலிமா சொல்லிக்கொடுத்தார்கள்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, 04-07-2011 திங்கட்கிழமை அன்று அவருக்கு கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக இஸ்லாமிய மார்க்கம் எத்தி வைக்கப்பட்டது.
QITC செயலாளர் சகோதரர் ஷாஜஹான் அவர்கள் திருமறைக் குர்ஆன் தமிழாக்கத்தினை வழங்கினார்கள்.

மேலும் அவருக்கு தூய இஸ்லாத்தினை, QITC அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம், MISC அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 11 ஜூலை, 2011

09-07-2011 ஃபனார் பள்ளி சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், கடந்த 09-07-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


.இதில் QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "இஸ்லாம் கூறும் ஆரோக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 07/07/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோதரர் A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கத்தர் கஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர் M. ஷாஜஹான் அவர்கள், "இஸ்லாமும் இங்க்லீஷ் மீடியமும்" என்ற தலைப்பில் கிறித்தவ மிஷன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம்களின் நிலை பற்றி உரையாற்றினார்கள்.

 QITC அழைப்பாளர் மௌலவி தமீம் அவர்கள், "நபி வழி திருமணம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "ரமலான் நோன்பின் நோக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.


இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை QITC செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

 இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், 5 ஜூலை, 2011

02-07-11 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், கடந்த 02-07-2011 சனிக்கிழமை, இஷா தொழுகைக்குப்பின், கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறையின் ஃபனார் [FANAR] பள்ளிவாசலில், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் [QITC] சார்பாக வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

.இதில் QITC அழைப்பாளர் மௌலவி. தமீம் அவர்கள் "உறுதியான நம்பிக்கை" என்ற தலைப்பில்  சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 4 ஜூலை, 2011

01/07/11 அரபி கல்வி பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹுவின் அருளால், வாரந்தோறும் நடைபெறும் அரபி கல்வி பயிற்சி வகுப்பு 12 வது வாரமாக, QITC மர்கசில் 01/07/2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் (6:45 - 8:00), QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்களால் நடத்தப்பட்டது.
 
 
இந்த வகுப்பில் மௌலவி அவர்கள் அரபி எழுத்துக்கள் உச்சரிப்பை உதாரணத்துடன் விளக்கினார்கள்.

 
தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இத்துடன் முதற்கட்ட வகுப்புகள் முடிவடைந்தன. இரண்டாம் கட்ட வகுப்புகள் இன்ஷாஅல்லாஹ் ராமலானிற்குப் பின் செப்டம்பர் 16 ல் ஆரம்பமாகும்.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

30/06/11 QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இறைவனின் திருப்பெயரால்...

QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30/06/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோ. A. முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "நன்றி பாராட்டுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் சகோ. சபீர் அஹ்மத் அவர்கள், "வெற்றியாளர்கள் யார்?" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மௌலவி தமீம் அவர்கள், "திருமணம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் ஆலோசனைப்பெட்டியில் போடப்பட்ட 3 மார்க்க கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை சகோ. அப்துல்கபூர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.