ஞாயிறு, 13 மார்ச், 2011

10/03/2011 - வியாழக்கிழமை பயான் நிகழ்ச்சி



வாராந்திர பயான் நிகழ்ச்சி 10/03/2011 அன்று இரவு 8:30 மணிக்கு QITC மர்கசில் சகோ. S. தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது.
மார்க்க பயான்


சகோ. Dr. அஹ்மத் இபுறாஹீம் - "நபித் தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பிலும்,

சகோ. அன்சார் மௌலவி - "துவாக்களின் சிறப்புக்கள்" என்ற தலைப்பிலும்,


சகோ. அப்துஸ்ஸமத் மதனி - "இறைவனின் சாபத்திற்குரியவர்கள்" என்ற தொடர் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட செயலாளர் சகோ. ஜலாலுதீன் - தலைமைக்கு நமது பங்களிப்பின் அவசியம் பற்றி சிற்றுரையாற்றினார். மேலும் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சகோ. அப்துல் ஹாலிக் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

புதிய நிர்வாகிகள் அறிமுகம்
தேர்தல் குழுத் தலைவர் சகோ. அப்துஸ்ஸமத் மதனி - புதிய நிர்வாகிகள்அறிமுகத்தின் அவசியத்தை வலியுறுத்தி சகோ. Dr. அஹ்மத் இபுறாஹீமை QITCயின் புதிய தலைவராக அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து தலைவர் மற்ற நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அறிவிப்புகள்
இறுதியாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள வாக்குரிமை பற்றியும், வாக்களர் பட்டியலில் நமது பெயரை சேர்ப்பது பற்றியும் (Form 6A) அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.