சனி, 31 டிசம்பர், 2011

QITC மர்கசில் 29-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 29-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் M.S.ஃபக்குருதீன் அவர்கள், "அறிவுரை பயனளிக்குமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் மவ்லவி லாயிக் அவர்கள், திருக்குர்ஆன் அத்தியாயம்-103 "அல் அஸ்ர் (காலம்)" விளக்கம் குறித்து உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் மவ்லவி முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தொடர் தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

QITC பொருளாளர் பீர் முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC துணைத்தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் புதிதாக வந்திருந்த அனைத்து சகோதரர்களும் நமது மர்கசில் உறுப்பினராகும்படி கேட்டுக்கொண்டு, QITC வெளியிட்டுள்ள 2012 காலண்டர் மற்றும் புதிய தலைப்புகளில் மார்க்க விளக்க DVD/CD-க்கள் மர்கசில் கிடைக்கும்; அவற்றை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

மேலும், QITC செயலாளர் மவ்லவி முஹம்மத் அலி MISc அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்..

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 28 டிசம்பர், 2011

30-12-2011 அன்று பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பிதழ்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பெண்கள் சிறப்பு
சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள்: 30-12-2011 வெள்ளி, மாலை 7:௦௦ மணி
இடம்: QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி!!

இன்ஷா அல்லாஹ், இந்த வாரம் 30-12-2011 வெள்ளியன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

கத்தரில் 10 இடங்களில் 23/12/2011 ஜும்மாவிற்குப் பின் நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சிகள்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

ஏகத்துவப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்குப்பின் கத்தரின் பல பகுதிகளில் QITC அழைப்பாளர்கள் மூலம் பயான் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

23-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் இடங்கள் மற்றும் உரையாற்றிய QITC அழைப்பாளர்களின் விபரம் வருமாறு:
  1. வக்ரா பகுதி - சகோதரர். வக்ராஹ் பாக்ருதீன் அவர்கள்
  2. நஜ்மா பகுதி - சகோதரர். யூசுப் அவர்கள்
  3. சனைய்யா அல் அத்தியா பகுதி - மௌலவீ. அன்சார் மஜீதி அவர்கள்
  4. மைதர் பகுதி - சகோதரர். ஷாஜஹான் அவர்கள்
  5. கர்தியாத் பகுதி - சகோதரர். காதர் மீரான் அவர்கள்
  6. லக்தா மற்றும் 
  7. கராஃபா பகுதிகள் - மௌலவீ. ரிஸ் கான் அவர்கள்
  8. புதிய சலாத்தா பகுதி - சகோதரர். அப்துல் கபூர் அவர்கள்
  9. பின் மஹ்மூத் பகுதி - மௌலவீ. நசீர் அவர்கள் 
  10. அல்கீஸ் பகுதி - மௌலவீ. எம் முஹம்மத் அலி misc அவர்கள்

 வக்ரா

 நஜ்மா

 சனைய்யா அல் அத்தியா

 மைதர்

 கர்தியாத்

 லக்தா

 கராஃபா 

 பின் மஹ்மூத் 

அல்கீஸ் 

இந்நிகழ்ச்சிகளில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இப்பகுதிகளில் வசிக்கும் கொள்கைச் சகோதரர்கள் தங்களுக்குத் தெரிந்த தமிழ் பேசும் இந்திய - இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களையும் தங்களுடன் அழைத்து வந்து தாவா பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

QITC மர்கசில் 23-12-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு (24-வது வாரம்)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 23-12-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாரந்தோறும் நடத்தப்படும் ஆரம்பநிலை அரபி பாட வகுப்பு (24-வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள். 

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 24 டிசம்பர், 2011

QITC மர்கசில் 22-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 22-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் ஷாஜஹான் அவர்கள், "கிறிஸ்துமஸும் ஈஸா நபியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தொடர் தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC துணைத்தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் QITC-யின் சார்பாக 2012-க்கான காலண்டரை வெளியிட்டார்கள். இதில் தினசரி தொழுகை நேரங்களும் அரபு மாதங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைவரும் வாங்கி, பிறருக்கும் கொடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

மேலும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 21 டிசம்பர், 2011

வாராந்திர அரபி பாட வகுப்பு (16-12-2011)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

16-12-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் தோஹா QITC மர்கசில் வாராந்திர அரபி பாட வகுப்பு (23 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 17 டிசம்பர், 2011

15-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 15-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள், "அற்பமான உலகமும் - அழியா மறுமையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் மஜிதி அவர்கள், "தாவாவின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

QITC துணைச்செயலாளர் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

கேள்வி (1):
மறுமையில் அர்ஷின் நிழல் யாருக்குக் கிடைக்கும்?

பதில் (1):
அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 
  1. நீதிமிக்க ஆட்சியாளர். 
  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 
  3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன். 
  4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 
  5. இறைவழியில் நட்புகொண்ட இருவர். 
  6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர். 
  7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புகாரி 6806.

கேள்வி (2):
மரணத்திற்குப்பின் வரும் நிரந்தர நன்மைகள் எவை?

பதில் (2):
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன்பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 3084.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


புதன், 14 டிசம்பர், 2011

வாராந்திர அரபி பாட வகுப்பு (09-12-2011)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

வாராந்திர அரபி பாட வகுப்பு (22 வது வாரம்) 09-12-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் தோஹா QITC மர்கசில் நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 12 டிசம்பர், 2011

"இஸ்லாத்தின் பார்வையில் இணைய உலகம்" சிறப்பு நிகழ்ச்சி (08-12-2011)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. 

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 08-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் QITC அழைப்பாளர் சகோதரர். மஸ்வூத் அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் இணைய உலகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

கணினி விளக்கக்காட்சியுடன் (Computer Presentation) நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நாம் இன்றைய நவீன கம்யூட்டர் யுகத்தில் இன்டர்நெட், ஈமெயில் மற்றும் சமூக இணைய தளங்களை தேவைக்கு மட்டும் முறையாக பயன்படுத்த வேண்டும்; மார்க்க அடிப்படையில் நமக்கு வரும் ஈமெயில் செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது; நேரத்தை வீணாக்கக்கூடாது போன்ற அறிவுரைகளை அதற்கான ஆதாரங்களுடன் விளக்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 5 டிசம்பர், 2011

02-12-2011 அன்று நடைபெற்ற அரபி பாட வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 02-12-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர அரபி பாட வகுப்பு (21 வது வாரம்) நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வகுப்பை நடத்தினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர, சகோதரிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கசில் 01-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 01-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் மௌலவி. ரிஸ்கான் அவர்கள், "அல்குரானில் அழகிய அறிவுரைகள்" என்ற தொடர் தலைப்பில் தொழுகை குறித்து உரையாற்றினார்கள். 

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் மஜிதி அவர்கள், "புதுவருடமும், புனித பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் முஹர்ரம் பத்தாம் நாள் மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்டதையும், அதனை நினைவுகூறும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் 9 & 10 -ம் நாட்கள் நோன்பு நோற்க சொன்னதையும் குறிப்பிட்டார்கள்.

மேலும் QITC அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக அறிவிப்புகள் செய்யப்பட்டு, அன்றைய பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.