ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது .






அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் ஏற்ப்பாடு செய்திருந்த இம்முகாமிற்கு நூறுக்கணக்கான சகோதரர்கள் தோஹா மற்றும் தொலை தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர். குருதி கொடையாளிகளின் , பெயர் பதிவும் மற்றும் உடல் பரிசோதனையும் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர் .
சரியாக 2:00 மணிக்கு தொடங்கப்பட்ட முகாம் , 4:00 மணிக்கு
பிறகு களை கட்ட தொடங்கியது . சகோதரர்கள் வரவு அதிகமாகவே , பலர் அமைதியாக நின்று ஒத்துழைப்பு தந்தார்கள். தொலை தூர இடங்களான , அல் கோர் , ராஸ் லாப்பான் , சனையா சகோதரர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு முப்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரிசையில் காத்து நின்றார்கள். பெயர் பதிவு மற்றும் உடல் பரிசோதனை 7:30 மணிக்கே நிறுத்தப்பட்டாலும் பல சகோதரர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .

பெயர் பதிவு செய்த சகோதரர்களுக்கே , 9:00 மணிவரை செல்லும் என்பதால் இரத்த வங்கி ஊழியர்கள் வந்திருந்த பல சகோதரர்களுக்கு அடுத்த முறை , அவசர சிக்கிச்சைகாக தேவை படும் போது அழைக்கிறோம் என்று கூறினார்கள். " உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி நிச்சயம் வழங்குவான் " என்று வருகை தந்து கொடுக்க முடியாமல் போன சகோதரர்களுக்கு நிர்வாகிகள் ஆறுதல் அளித்தனர். மொத்தம் 72 சகோதரர்கள் குருதி கோடை அளித்தார்கள். இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துஸ் சமத் மதனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது .

திங்கள், 30 நவம்பர், 2009

கத்தரில் ஈதுல் அதா கொண்டாட்டம்










கடந்த வெள்ளிகிழமை 27/11/2009 அன்று கத்தரில் ஈதுல் அதா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் இவ்வருடமும் , மால் அருகே உள்ள " அலி பின் அலி அலி முசல்மானியா பள்ளியில் சிறப்பு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமை வகித்தார்.
பின்னர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் , கதீப் அவர்களின் அரபி உரையினை மொழிபெயர்த்து உரையாற்றினார். இன்றைய தினம் இபுராஹீம் நபி அவர்களின் தியாக வரலாற்றை நினைவு கூர்ந்தவர்களாக , நம்முடைய தியாகத்தை ஒப்பு நோக்குகையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தில் இருக்கிறோம் . நம் வாழ் நாள் முழுவதும் தியாக சீலர்களாக வாழ்ந்தாலும் தியாகத்தில் அவரிடத்துக்கு உயர முடியாது .எனினும் நாம் அவருடைய தியாகத்தின் வாசனையை நுகரவேண்டுமானால் ,நம்முடைய செயல் பாடுகளை அல்லாஹ்விற்காக மட்டும் , நன்மையின் பக்கம் நின்ற சாலிஹான நன் மக்களாக ஆகவேண்டும் என்றார்.
பின்னர் மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் , இன்ஷா அல்லாஹ் டிசம்பர் முதல் , நடைபெற இருக்கும் " இஸ்லாமிய அடிப்படை கல்வி " என்ற வகுப்பில் அனைவரும் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தார். அடுத்ததாக , கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் , " 2010 க்கான காலண்டர் வெளியிடப்பட்டது . முதல் பிரதியை மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள் . பின்னர் சகோதரர் லியாகத் அலி அவர்கள், " நல்அமல்களின் பக்கம் உங்கள் கவனம் எப்போதும் இருக்கவேண்டும் " என்ற சிறிய உரையாற்றினார். நூற்றுக்கணக்கான கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்கள் ,தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு , ஒருவர்கொருவர் தத்தமது வாழ்த்துக்களை பரிமாறிகொண்ட காட்சி , சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது . இது போன்ற சந்தர்பத்தை ஏற்படுத்தி தந்த அல்லாவிற்கே எல்லா புகழும் .
அல்ஹம்து லில்லாஹ் !



-----------------------------------------------------



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குர்ஆன் 3:110

புதன், 25 நவம்பர், 2009

ஹஜ் பெருநாள் சிறப்புரை (அழைப்பு)



ஈதுல் அதா பெருநாள் சிறப்பு உரை

வழங்குபவர் : சகோதரர் மௌலவி முஹம்மது அலி

இடம் : மால் அருகே உள்ள " அலி பின் அலி அல்முசல்மானிய பள்ளியில் "

தொழுகை நேரம் : 5:45 மணிக்கு

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

அனைவரும் வருக ! சகோதரத்துவ சங்கமத்தில் பெருநாளை கொண்டாடுக !


புதன், 11 நவம்பர், 2009

பானர் எக்ஸ்போ 2009




"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

செவ்வாய், 10 நவம்பர், 2009

குர்பானியின் சட்டங்கள்



بسم الله الرحمن الرحيم

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ, அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி)நூல்:புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க அஹ்மத்-16151)

பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்:முஸ்லிம் (3637)

முஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆட்டின் எண்ணிக்கை

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அதா பின் யஸார், நூல்: திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
அறிவிப்பவர் அலீ (ரலி),  நூல் புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி

மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)நூல் முஸ்லிம் (2323)

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்

விநியோகம் செய்தல் 

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர் அலீ நூல் புகாரி. (1717)

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள் 

ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் பரா (ரலி)நூல் நஸயீ (4293)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது 

ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)நூல் முஸ்லிம் (3631) 

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை

ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் உம்மு ஸலமா (ரலி)நூல் நஸயீ (4285) 

நாமே அறுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

சனி, 19 செப்டம்பர், 2009

இப்தார் நிகழ்ச்சி 2009




கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் , கத்தர் வாழ் தமிழ் முஸ்லிம்களுக்காக நேற்று 18/09/2009 வெள்ளிக்கிழமை பொது இப்தார் நிகழ்ச்சி ஒன்றை , அபூபக்கர் தனியார் மேல் நிலை பள்ளியில் ஏற்பாடு செய்து இருந்தது. சரியாக மாலை ஐந்து மணிக்கு மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஒலி ஒளி கலந்தாய்வு ( video conferencing ) மூலம் தலைமையகம் சென்னையிலிருந்து " ரமலான் நம் மீது ஏற்படுத்திய மாற்றம் என்ன ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நோன்பு திறப்பத்தற்க்கான பேரீச்சம் பழம் , தண்ணீர் , ஜுஸ் ஆகியவைகள் நுழைவாயிலில் கொடுக்கப்பட்டது . நோன்பு திறந்தவுடன் , மக்ரிப் தொழுகையை சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள் . பின்னர் வந்திருந்த அனைவருக்கும் , உணவு பரிமாறப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் இப்தார் அரங்கத்தை அமைக்கும் பணியிலும் , உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் பணியிலும் சிறப்பாக செய்தனர் . அரங்கத்தின் அனைத்து துப்புரவு பணிகளையும் ICC நிறுவனம் சிறப்பான முறையில் செய்தது.இந்நிகழ்ச்சியில் எந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் இலவச சிடிக்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்திதந்த அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும். அல் ஹம்துலில்லாஹ்!



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

சனி, 12 செப்டம்பர், 2009

அல்கோர் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி






வியாழன் இரவு 10-09-2009 அன்று தோஹாவின் அடுத்த பெரிய நகரமான அல்கோர் என்னுமிடத்தில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் அல்கோர் கிளை , இந்நிகழ்ச்சியை அல்கோர் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் விளையாட்டு அரங்கில் ஏற்ப்பாடு செய்த்திருந்தனர். முதலாவதாக சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் " ரமலானில் தர்மம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் மௌலவி லாயிக் அவர்கள் " பவ மன்னிப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாபிர் அவர்கள் " ரமலான் ஏற்ப்படுத்திய மற்றம் என்ன ? என்ற தலைப்பில் உரையாற்றினார் .

இறுதியாக மௌலவி முனைப் அவர்கள் இரவுத்தொழுகையின் அவசியம் என்ன ? தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியை சகோதரர் தும்பச்சி மீரான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.


நிகழ்ச்சி ஏற்பாட்டை அல் கோர் கிளை ஒருங்கினைபாளர்களான சகோதரர் இணையத்துல்லாஹ மற்றும் சகோதரர் நூருல்அமீன் அவர்கள் முன்னின்று செய்தார்கள்.

சொற்பொழிவு இறுதியில் மௌலவி முஹம்மது அவர்களும் மௌலவி பைசல் அவர்களும் இரவுத்தொழுகை நடத்தினார்கள். சஹர் உணவு ஏற்பாட்டை சகோதரர் ஜாபர் , சகோதரர்அபுதாகிர் , சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்களும் சிறப்பாக செய்தார்கள்.அல்கோர் சுற்று வட்டாரத்தில் வசித்துவரும் தமிழறிந்த சகோதர்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் அல்கோரில் தமிழறிந்த அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் , பல புதிய சகோதரர்கள் தங்களும் ஜாமத்தில் இணைத்துக்கொண்டு செயல்பட அர்வமுள்ளதாக மண்டல நிர்வாகிகளிடம் கூறினர்.பஜர் தொழுகைக்கு பின்னர் அல்கோர் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சகோதரர் நவாஸ் ( பேட்டை) அவர்கள் பொறுப்பாளர் , சகோதரர் நவாஸ் ( நாகூர் ) அவர்கள் துணை பொறுப்பாளர் , சகோதரர் ஹமீது ( ராஜகிரி ) அவர்கள் துணை பொறுப்பாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய அல் கோர் கிளை தேர்ந்தெடுப்பில் , QITC தலைவர் சகோதரர் ஷபீர் அவர்களும் செயலாளர் மசூத் அவர்களும், துணை செயலாளர்கள் சகோதரர் அப்துல் கபூர் , மற்றும் ஹாஜி முஹம்மது , ஜியாவுதீன் அவர்களும் உடன் இருந்தார்கள்.



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன்



அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ,கத்தர் இந்திய மையத்தின் மார்க்க பேச்சாளார் சகோதரர் முஹம்மது அலீ அவர்கள் வழிக்காட்டுதலுடன் ஐம்பது பேர் கொண்ட உம்ரா பயணக்குழு கத்தாரிலிருந்து சென்றது. உம்ரா சென்ற குழுவினர் இஹ்ரம் உடையுடன் இருப்பதை க்காணலாம் . நபி வழிப்படி உம்ராவில் செய்ய வேண்டிய எல்லா கிரியைகளையும் சிறப்பாக செய்து முடித்தனர்.
--------------------------------------------------------------------------------------
மக்காவிலிருந்து MMS மூலமாக தகவல் அளித்தவர் சகோதரர் முஹம்மது அலீ. 11-09-2009

வியாழன், 10 செப்டம்பர், 2009

இப்தார் நிகழ்ச்சி 2009 (அழைப்பு)



இன்ஷா அல்லாஹ் வரும் 18-09-2009 வெள்ளிக்கிழமை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து . உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களோடு , மாற்று மதநண்பர்களையும் அழைத்து வாருங்கள் . பூவையருக்கு தனி இட வசதி உண்டு .
நேரம் : சரியாக ஐந்து மணி
இடம் : அபூ பக்கர் அஸ்சித்திக் பள்ளிக்கூடம்
முந்தாஜா பார்க் அருகில்

மாபெரும் இப்தார் விருந்து நடக்கும் அபூ பக்கர் அஸ் சித்திக் பள்ளிகூட உள் விளையாட்டு அரங்கத்திற்கு வழி காண்பிக்கும் வரைபடம் .
அன்புடன் அழைக்கிறது
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி (அழைப்பு)

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று


அல்கோர்
ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : சகோதரர் நூருல் அமீன்
நிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு

சகோதரர் முஹம்மது யூசுப்
தலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)

சகோதரர் முஹம்மது லாயிக்
தலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)

சகோதரர் முஹம்மது லாபிர்
ரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ( 12:00-12:40)

சகோதரர் முனாப்
இரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)


நன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது

இரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பெண்களுக்கான தனி இட வசதி உண்டு.
அறிவு போட்டியை நடத்துபவர்
சகோதரர் மௌலவி அன்சார் அவர்கள்
ஒவ்வரு சொர்பொழிவுக்குமிடையே கேள்விகள் கேட்கப்பட்டு , சரியான பதில் அளிப்பவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
----------------------





مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்
QATAR INDIAN THOWHEED CENTRE
POST BOX NO:31579
DOHA-QATAR.
00974 4315863
qitcdoha@gmail.com
For More info Please visit
www.qatartntj.blogspot.com

திங்கள், 7 செப்டம்பர், 2009

QITC ரமலான் கோப்பை 2009





இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியில் வென்ற முதல் மூன்று நிலைகளுக்கு "QITC ரமலான் கோப்பை" வழங்கப்பட்டது. மேலும் பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.



பின்னர் கத்தார் இந்திய தவ்ஹீத் மையத்தில் ,சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் நடத்திய "இஸ்லாமிய அடிப்படை கொள்கை " ( அகீதா ) வகுப்பில் (மூன்று மாத படிப்பு) தேர்ச்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.
From saudi markas sagar prg 030909

From saudi markas sagar prg 030909

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு



கடந்த வியாழன் அன்று சவுதி மர்கசில் , ஸஹர் நேர நிகழ்ச்சியில் , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி நடந்து முடிந்த பின்னர் , மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. முதலாவதாக மௌலவி லாயிக் அவர்கள் " வெட்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



இரண்டாவதாக மௌலவி முஹம்மது அலீ அவர்கள் " சுத்தம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இறுதியாக "பொறுமை" என்ற தலைப்பில் சகோதரர் லாபிர் மதனீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



நானூறுக்கும் சகோதரர்கள் சகோதிரிகள் கலந்து " கொண்டு " பயனடைந்தார்கள்





சனி, 5 செப்டம்பர், 2009

குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி


03-09-09 வியாழன் இரவு ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் , மதீனா-கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கசில் ,இரவு 10:30 மணிக்கு துவங்கியது.இந்நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
நிகழ்ச்சியின் முன்னராக , குழந்தைகளுக்கான இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலீ அவர்கள் நடத்தினார்கள் .இப்போட்டிக்கு , ஆறு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் ஒரு பிரிவாகவும் , பத்து வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மற்றொரு பிரிவாகவும் , பதினாலு வயதுக்குட்டபட்ட சிறுவர் சிறுமியர் மூன்றாவது பிரிவாகவும் வகைபடுத்தபட்டிருந்தனர். இப்போட்டியில் கலந்து கொள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெயர் பதிவு செய்திருந்தனர்.


இப்போட்டிகளை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் , குழந்தைகளிடம் கேள்வி கேட்டு , இஸ்லாத்தில் அறிய வேண்டிய பல எளிய விசயங்களை சிறுவர் சிறுமியர் மூலமாக பார்வையாளர்களை அறிய தந்த விதம் வெகுவாக கவர்ந்தது. இப்போட்டியில் மதீப்பீட்டர்களாக மௌலவி அன்ஸார் அவர்களும் ,மௌலவி அசலம் அவர்களும் சகோதரர் பீர் முஹம்மது அவர்களும் செயலாற்றினார்கள்.

வியாழன், 3 செப்டம்பர், 2009



நமது மர்கஸில் , உங்களுக்கு தேவையான மார்க்கநூல்கள் , பல் வேறு தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு சிடிக்கள் கிடைக்கிறது மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் உங்கள் கைபேசியில் பதிவுவிறக்கம் செய்துகொள்ள ஏதுவான MP3 , 3GP கோப்புகளில் இலவசமாக பதிவுவிறக்கம் செய்துக்கொள்ளவும்

வியாழன் இரவு சிறப்பு பயான்






09-07-2009 அன்று வியாழன் இரவு நடந்த சிறப்பு சொற்பொழிவில் சகோதரர் மௌலவி ழாfஇர் மதனி அவர்கள் " குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் .
பின்னர் மொளலவி முஹம்மது அலி அவர்கள் " பெண்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் . தோஹாவின் பல பாகங்களிலுருந்தும் பல சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். வாராவாரம் நடந்து க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிகளில் எல்லாரும் கலந்துக்கொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௧0
-----------------------------------------------------------------------------------------------

10-09-2009 அன்று அல்கோர் ஸஹர் நேர நிகழ்ச்சி. (அழைப்பு)

பிஸ்மில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன் கிழமை 10-09-2009 அன்று அல்கோர்

ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கம் ஸஹர் நேர நிகழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல்

தலைமை : சகோதரர் நூருல் அமீன்

நிகழ்ச்சி துவக்கம் : சரியாக 10:30 மணிக்கு

சகோதரர் முஹம்மது யூசுப்

தலைப்பு : ரமலானில் தர்மம் ( 10:45 - 11:15)

சகோதரர் முஹம்மது லாயிக்

தலைப்பு : பாவ மன்னிப்பு ( 11:20-11:55)

சகோதரர் முஹம்மது லாபிர்

ரமலான் ஏற்படுத்திய மாற்றம் என்ன ? ( 12:00-12:40)

சகோதரர் முனாப்

இரவு தொழுகையின் சிறப்பு (12:40-1:25)

நன்றியுரை : சகோதரர் நைனா முஹம்மது

இரவு தொழுகை ( கியாமுலைல் ) நடத்தப்படும் ( 1:30 - 2:15)

ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பெண்களுக்கான தனி இட வசதி உண்டு.

புதன், 2 செப்டம்பர், 2009

சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி (அழைப்பு)


இன்ஷா அல்லாஹ்,
சவுதி மர்கசில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
நாள் : வியாழன் இரவு 03-09-2009
நேரம் : இரவு 9:30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1:00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்
சிறுவர்களுக்கான இஸ்லாமிய அறிவு போட்டி 9:30 - 10:30
தலைமையுரை :சகோதரர் முஹம்மது யூசுப் 10:00-10:25 வரை
சிறப்பு உரை :வெட்கம்
சகோதரர் முஹம்மது லாயிக் 10:30-11:10 வரை
சிறப்புரை : ஆசை
சகோதரர் முஹம்மது அலீ 11:15 - 12:00 வரை
சிறப்புரை ;பொறுமை
சகோதரர் முஹம்மது லாபிர் 12:00-12:40 வரை
பரிசு வழங்குதல்
நிறைவுரை : சகோதரர் அப்துல் கபூர்
ஸஹர் நேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
குழந்தைகள் பெண்களுக்கான தனி இட வசதி உண்டு
வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .தொடர்புகொள்க 5424109
அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி




27-08-09வியாழன் இரவு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுவர் ஜியாவுதீன் அவர்கள் " திருகுர்ஆன் திருமறையை தினமும் ஓதுங்கள் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். அடுத்ததாக மௌலவி லாயிக் அவர்கள் "ரமலான் தரும் பாடம்" என்ற தலைப்பிலும் ,மௌலவி லாபிர் மதனி அவர்கள் " உறவை பேணுதல்" என்ற தலைப்பிலும் மௌலவி அன்ஸார் அவர்கள் " உணர படாத தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். " பித்ரா எனும் தர்மம் " என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். ஒவ்வரு சொற்பொழிவுக்கு பின்னர் , சிறுவர் சிறுமியர்கள் குர்ஆனிலிருந்து தங்களுக்கு தெரிந்த சூராக்களை ஓதினார்கள். இறுதியாக இஸ்லாமிய அறிவு போட்டியை சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் நடத்தினார்கள். சகோதரர் மஸ் ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். இரவு 10:30 மணிக்கு தொடங்கி 2:00 மணிவரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் விறுவிறுப்போடு நடைபெற்றது . வருகை தந்திருந்த அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கத்தரில் நடந்த "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"




கத்தார் இந்திய தவ்ஹீத் மையம் கடந்த வெள்ளிகிழமை மாலை பதினாலாம் தேதி " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் , சகோதரர் முஹம்து அல்தாபி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்று மத சகோதரர்களுக்கு தெளிவான முறையில் பதில் அளித்தார்கள்.



கேள்வி கேட்ட அனைத்து மாற்று மத சகோதர சகோதிரிகளுக்கு திருகுர்ஆன் தமிழ் மொழியாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் " திருமறையை தாங்களும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்ட மாற்று மத அன்பர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலே அரங்கத்தின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி ,இருக்கைகள் இல்லாமல் பலர் சுவர் ஓரமாக நின்று நிகழ்ச்சியை கேட்டுகொண்டிருந்தர்கள் . நிற்கவும் இடம் இல்லாமல் பாதைகளினிடையே மக்கள் அமர்ந்தார்கள் .




மேலும் கூட்டம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நிர்வாகிகள் , துரிதமாக செயல்பட்டு மர்கசிலிருந்து நூறு பிளாஸ்டிக் இருக்கைகளை கொண்டுவந்து போட்டனர்.
வளைகுடா நாடுகளின் பள்ளி விடுமுறை என்பதால் சுமாரான கூட்டம் தான் வரும் என்று எண்ணிய நிர்வாகிகள் அதற்கேற்ற ஏற்பாட்டுடன் தான் இருந்தனர். கூட்டம் இரட்டிப்பாக வந்தால் திக்குமுக்காடிய நிர்வாகிகள் நிகழ்ச்சியின் நடுவே உணவு ஆர்டரை கூட்டினர்.
பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் , சிறய வேன்கள் தோஹாவின் பல பாகங்களிருந்தும் சகோதரர்களை கொண்டுவர பயன்பட்டன. வாகன போக்குவரத்து ஏற்பாட்டை சகோதரர் மீரான் அவர்களும் ,சகோதரர் ஷேய்க் அப்துல்லாஹ் அவர்ககளும் சிறப்பாக செய்து இருந்தனர். தொண்டர்கள் ஒருங்கிணைப்பை சகோதரர் ஹாஜி முஹம்மது அவர்கள் கவனித்து கொண்டார்கள். " Islam for Global solutions" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் சிறப்பான முறையில் பணிகளை கவனித்து கொண்டார்கள் .
துணை செயலாளர் முஹம்மது அலி MISC அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அஹ்மத் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். பொருளாளர் இப்றாஹீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பல மாற்று மத அன்பர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

-------------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"
அல்குரான் 3:110

சனி, 8 ஆகஸ்ட், 2009

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (அழைப்பு)



பல்வேறு சமூகங்களிடையே இணக்கத்தையும் , புரிந்துதுணர்வையும் ஏற்படுத்தவும் குறிப்பாக, தமிழகத்தில் மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணம் கொண்டுள்ளதை அகற்றிடவும் , இஸ்லாமிய இறை கோட்பாடுகள் , தற்கால முஸ்லீம்கள் ஒழுகும் நடைமுறைகளே இஸ்லாம் போதித்தது என விளங்கி வைத்துள்ள முஸ்லிமல்லாதவர்களிடம் ,முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் போதித்த இறை மார்க்கமே கலப்பில்லாதது என அவர்களுக்கு விளங்க வைத்திடவும் , நம்முடைய களங்களில் அவர்களை அழைத்து அவர்கள் தொடுக்கும் அனைத்து ஐயங்களுக்கு அவர்கள் மனம் ஏற்று க்கொள்ளும் வகையில் விடையளித்திடவும் ,உள்ளங்களிடையே உலகம் உள்ளவும் சமாதனம் சகோதரத்துவம் எத்திவைக்கவும் , ஒரு சிறிய நம்மாலான முயற்சி தான்
" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " என்ற நிகழ்ச்சி .
இறைவன் நாடினால் வரும் வெள்ளியன்று பதினாலாம் தேதி, மாலை 5:30 மணிக்கு , FANAR உள்ளரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
கத்தர் வாழ் தமிழ் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில்
அனைவரும் தங்களுடை முஸ்லிமல்லாத சகோதரர்களை குடும்பத்தோடு அழைத்துவருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்வையிடவும்.

குறிப்பு:
வாகனங்கள் நிறுத்துமிடம் அரங்கத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ளது.

வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.வாகன வசதி வேண்டுவோர் ,நமது அலுவலகத்தை 4315863 / 5424109 இலக்கத்தில் முன்கூட்டியே தொடர்புகொள்ளவும்.

வெள்ளி, 31 ஜூலை, 2009

இலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC

இன்று இரவு வியாழக்கிழமை நடைப்பெற்ற வாராந்திர பயானில் மொளலவி லாபிர் அவர்கள் " பாராத் இரவும் மத்ஹப்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கத்தரில் முக்கிய தொழில் நகரமான ராஸ்லாபான் என்ற இடத்தில பணிபுரியும் திருவாரூரை சேர்ந்த கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.


அவருக்கு,மௌலவி முஹம்மது அலி அவர்கள் , இஸ்லாத்தின் கடவுட் கொள்கைகளை விளக்கி கூறி, கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். பயானில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் " அச் சகோதரர் " தான் ஆறு வருடங்களாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டும் பல்வேறு பொது பயான்களில் கலந்து கொண்டு உரைகளை செவிமடுதிருப்பதாகவும் ," குறிப்பாக பண்டாரவடையில் வரதட்சணை ஒழிப்பு உரைகளை கேட்டதுமுதல் தனது உள்ளம் மாற்றம் கொண்டதையும் கூறினார். இன்ஷா அல்லாஹ் தன்னுடைய குடும்பத்தார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி இத்தூய கொள்கையில் இணைக்க செய்வேன் என்று கூறினார் .
இறுதியாக இலங்கை பேருவளையில் தரீகா கும்பல் தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல சகோதர்களை கண்மூடித்தனமாக தாக்கி , இரண்டு நபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து ஷகீத் ஆக்கபட்டிருகிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் அல்லாஹ்வின் பெயரல்லாமல் வேறு ஒன்றினை அழைக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டிருக்க , இணை கற்பிக்கும் காரியங்களில் மூழ்கிவிட்ட கும்பல் சத்தியத்தை எடுத்துரைத்த சகோதரர்களின் மேல் கொலை வெறி தாக்குதலை நடத்திஇருக்கின்றது. பள்ளிவாயில்குள்ளே இஸ்லாத்தின் எதிரி கூட செய்ய துணியாத இத்தகைய வெறி செயலை முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடத்திக்காண்பித்து இருகிறார்கள். இத்தாக்குதலை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வன்மையாக கண்டிப்பதோடு , நிதானத்தோடும் விவேகத்தோடும் வருங் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நெஞ்சுரத்தோடு தவாவின் வேகத்தை முடிக்கிவிட வேண்டும் என்று மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அகமது கூறினார் .

---------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"

அல்குரான் 3:110

பராஅத்தும் மத்ஹபுகளும்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பதுகிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்

” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3: 110

செவ்வாய், 28 ஜூலை, 2009

ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்













கடந்த வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்பு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ரமலான் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வருகை பதிவு:
வருகை தந்த அணைத்து செயல் வீரர்களின் பெயர் , கிளை தொடர்பு எண் ஆகியவைகளை துணை செயலாளர்கள் சகோ ஷாஜகான் & சகோ ஜியாவுதீன் பதிவு செய்தார்கள்.
வரவேற்புரை
செயலாளர் மசூத் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு பயான்
நிகழ்ச்சியின் துவக்கத்தில் "ஏகத்துவாதிகளிடம் இருக்கவேண்டிய இறையச்சம்" என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
தலைமை
கத்தர் இந்திய மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார்கள்.
மூத்த தலைவர் உரை
பின்னர் மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்களின் சுருக்க உரையின் வந்திருந்த செயல் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் " நாமெல்லாம் களத்தில் நிக்கிற போராளிகள் " , நன்மையை ஏவி தீமையை தடுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்றார் .
நிகழ்ச்சியின் அம்சங்கள்.
துணை செயலாளர் அப்துல் கபூர் அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் அம்சங்களை விளக்கினார் . குறிப்பாக எதிர் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கின்ற "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " எப்படி அமைய வேண்டும் என்ற ஒழுங்குகளை எல்லாரும் எளிதாக புரியும் வண்ணம் கூறினார் . வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது . அவையாவன விளம்பர குழுவில் ,இக்குழுவில் 14 செயல் வீரர்கள் இடம்பெற்று இருக்கின்றனர் .வாகன குழுவில் , இக்குழுவில் 4 செயல் வீரர்களும் , உணவு ஏற்பாட்டு குழுவில் 4 பேரும் , ஒலி ஒளி அமைப்பு குழுவில் 6 பேரும் , ஊடகக்குழுவில் மூவரும் செயல் பட முன்வந்து இருக்கின்றார்கள்
இக்குழுக்களை முறையாக துணை பொருளாளர் சகோ பீர் முஹம்மது அவர்கள் பதிவு செய்து க்கொண்டார்கள்.

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் , கலந்து கொள்ளும் மாற்று மத சகோதரர்களுக்கு திரு குர்ஆன் மொழியாக்கத்தை அன்பளிப்பாக வழங்க அவையினர் பலர் ஆர்வமுடன் முன்வந்து பெயர் கொடுத்தனர். மாற்றுமத சகோதரர்கள் கேட்டுக்கும் தலைப்பில் புத்தகங்கள் வழங்கவும் ,DVD, CD க்கள் வழங்கவும் பல சகோதரர்கள் தங்களுடைய பங்களிப்பை பதிவு செய்தனர்.
நன்றியுரையுடன் துவா ஓதி கூட்டம் நிறைவு பெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.
--------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் !
அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:௧௰
----------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 ஜூலை, 2009

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை

H1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல சவுதி அரசாங்கம் கெடுபிடி செய்துள்ளது என்று வெளிவந்த செய்தியை கத்தர் ஹஜ் கமிட்டி வன்மையாக மறுத்துள்ளது. இதனை கத்தர் ஹஜ் கமிட்டியின் உயர் அதிகாரி ஒருவர் கத்தர் நாளிதழில் தெரிவித்தார். மேலும் கத்தர் கமிட்டியின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் கூறினார். கத்தர் ஹஜ் கமிட்டியின் துணை மேலாளர் ஜாஸ்சிம் அல் குபெயசி கூறுகையில் " இது சம்பந்தமாக ஹஜ் உம்ரா டிராவல் ஏஜண்டுகளுக்கு கட்டளைகளையும் எதையும் பிறபிக்கபடவில்லை என்று கூறினார். ஆனால் சவுதி அரசு ஹஜ்ஜுக்கு வரும் பயணிகளிடம் இக்காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தாமும் உட்படுவோம் என்று கூறினார். இந்த ஆண்டு ஹஜ் உம்ரா ஏற்பாடுகளின் போது எதிர் கொள்ளவேண்டிய விசயங்களை , விரைவில் கலந்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார் . இக்கமிட்டியில் கத்தர் செம்பிறை சங்கம் , உள்துறை அமைச்சகம் , அவ்கப் மற்றும் இஸ்லாமிய துறை அங்கம் வகிக்கும் என்று கூறினார் . இக்கிருமி கத்தெரிலிருந்து செல்லும் பயணிகளிடம் பரவாமல் தடுக்க எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். இக்கிருமி பரவாமல் தடுக்க , தகுந்த தற்காப்பு மூலமாக தான் வெல்ல முடியும்.அதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதோ அல்லது அதே நேரத்தில் முழுமையாக அலட்சியம் செய்யவோ கூடாது. தொடக்கத்தில் நாம் எண்ணிய அளவிற்கு பீதியடை அவசியம் இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உம்ரா செல்பவர்கள் குறைந்துவிட்டனவே என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்தார் அந்த அதிகாரி . வழக்கம் போல இந்த வருடமும் அதே அளவு எண்ணிக்கையில் பெயர் பதிவுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார். உண்மையில், இக்கிருமியால் பதிக்கப்பட்ட நாடுகளிருந்து புனித பயணிகள் ஒதுக்கீடு ( quota) குறைக்கப்பட்டுள்ளதால் , கத்தர் போன்ற அரபு நாடுகளின் ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல ஏஜண்டுகள் நம்பிக்கை தெரிவித்தனர். இக்க்காயச்ச்சல் ஏற்படுத்தியுள்ள பீதியால் ஓமான் , பஹ்ரைன் போன்ற நாடுகள் ஹஜ் செல்ல தடை விதித்துள்ள நிலையில் ,தொற்றும் அபாயம் உள்ளதால் ஹஜ் செய்ய தடை விதிப்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திருக்கிறது.

நன்றி : Gulf times 12july2009

------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:110

-------------------------------------------------------------------------------------

சனி, 11 ஜூலை, 2009

ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்


கடந்த 2008 டிசம்பர் 24 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை தொடர் குண்டு மழை பொழிந்து எராளமான பொருள் நாசத்தையும் உயிர் சேதத்தையும் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்தது உலக உயிர் கொல்லியான இஸ்ரேல். பாலஸ்தீனியர்கள் வசமுள்ள காசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1450 க்கும் மேல்பட்டோர் என்று காசாவில் நிலை கொண்டிருக்கும் உலக மனித உரிமை கழகம் தெரிவித்திருக்கிறது. 22 நாட்கள் நடைபெற்ற இஸ்ரேலின் இராணுவ வெறியாட்டத்தால் நூற்றுக்கும் மேல்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர் , குழந்தை அநாதைகளாக்கப்பட்டனர். இவ்வாறு பாதிகப்பட்டவர்களை பராமரிக்கவும் அவர்கள் வாழ்வில் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தவும் இஸ்லாம் காட்டிதந்த பெண்கள் மறுவாழ்வு திட்டத்தை கையில் எடுத்தது ஹமாஸ் போராளி இயக்கம். சென்ற வாரம் காசாவில் ஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம் நடத்தி வைத்தது ஹமாஸ் இயக்கம். நூறு விதவைகளும் மணப்பெண் கோலம் பூண்டு தங்களுடைய இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள். அந்த நூறு பெண்களில் பெரும்பான்மையினர் 25 வயது கடந்தவர்கள். சுற்றாரும் உறவினரும் சூழ கலந்து கொண்டு அவர்கள் பிள்ளைகளுடன் மனபந்தலில் காணப்பட்டனர். விதவைக்கு வாழ்வளிக்க முன் வந்த நூறு மாப்பிளைகளுக்கு 2800 டாலர்களை ஊக்கதொகையாக வழங்கியது ஹமாஸ்.

----------------------------------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல் - குர்ஆன் 3:110
-------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 19 ஜூன், 2009

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (அழைப்பு)

மாதந்திர பெண்கள் சிறப்பு பயான்.
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற வெள்ளிக்கிழமை 26-06-2009 அன்று மாலை 7:00 மணிக்கு ..
இடம் : QITC மர்கஸ் ( நஜ்மா ஸுக்அல் கராஜ் பின் புறம் )...
ஒவ்வரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான , பெண்கள் உரையாற்றும் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தார்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கிறோம் .
---------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3:110
-------------------------------------------------------------------------

புதன், 17 ஜூன், 2009

உம்ரா 2009


"ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும் "

என்பது நபிமொழி .

அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ் (ரலி ) நூல் : புகாரி 1782 ,1863

இன்ஷாஅல்லாஹ் ! ரமலான் இறுதி பத்தில் மார்க்க அறிஞர் வழிகாட்டுதலில் செய் முறை பயிற்சியுடன் கூடிய நபி (ஸல் ) அவர்களின் காட்டித்தந்த வழியில் உம்ரா பயணம் மேற்க்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.

புனித மக்காவில் பத்துநாட்கள் .......

மதீனாவில் இரண்டு நாட்கள் ......
சிறந்த தங்குமிட வசதி .....

தினமும் இஸ்லாமிய நல்லொழக்க பயிற்சி வகுப்புகள் ....

என இஸ்லாத்தை பற்றி ஆழமாக அறிந்து க்கொள்ளும் அரிய வாய்ப்புகளுடன் இப்பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. உம்ரா செல்ல எண்ணமுள்ளவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் விவரங்களுக்கு உடன் தொடர்பு க்கொள்ளவும்
விண்ணப்ப படிவம்
Phone :4315863

e-mail:qitcdoha@gmail.com

-----------------------------------------------------------------------------------------

"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !" அல்குரான் 3:110

------------------------------------------------------------------------------------------

சனி, 6 ஜூன், 2009

QITC உம்ரா 2009