


வெள்ளிக்கிழமை 5-12-2008 அன்று இரவு FANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் முஹம்மது யூஸுப் அவர்கள் தலைமை தாங்கினார். முதலாவதாக சகோதரர் நஜுமுல்ஹுசைன் அவர்கள் "ஹஜ் பெருநாள் ஒரு பார்வை " என்ற தலைப்பில் உரையாற்றினர் . பின்னர் " இஸ்லாமும் இன்றைய தலைமுறையும் " என்ற தலைப்பில் சகோதரர் தவ்பிக் மதனி அவர்கள் சிறப்புரையாற்றினார். அடுத்தகட்டமாக மையத்தின் 2009 காலன்டரை TNTJ, மாநில பேச்சாளார் அப்பாஸ் அலி அவர்கள் வெளீயிட QITC அழைப்பாளர் டாக்டர் அகமது இப்றாகிம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளார் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் " அல்லாஹ் நமகளித்த அருட் கொடைப் பற்றி விசாரிக்கப்படும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் QITC மர்கஸில் நடைபெற்ற மூன்று மாத கொள்கை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்கள் சையத் முஹம்மத், முஹம்மத் அஸ்வி, அப்துர்ரஹீம், முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகிய நால்வருக்கு சான்றிதழ்களும், மாதந்தோறும் நடத்தப்பெறும் மார்க்க அறிவுப்போட்டிகளில் 2007 – 2008 ம் ஆண்டில் முதல் மூன்று நிலையில் தேற்சிபெற்ற சகோதரி ஜியா சித்தாரா, சகோதரி கதீஜத்துல் நூரியா, சகோ.முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.இறுதியாக துணை செயலாளர் ஷபிர் அஹமத் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி துஆ வுடன் நிறைவேறியது