புதன், 1 அக்டோபர், 2008

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்












அல்லாஹுவின் பெருங்கிருபையால் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு ஈத் பெருநாள் அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டி , " அலி பின் அலி அல் முஸ்ஸல்மாநி ஈத்கா பள்ளியில் " முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். இமாமின் குத்பா உரைக்கு பின்னர் தமிழில் சிறப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . QITC யின் துணை செயலாளர் ஷபீர் அவர்கள் முன்னிலையில் , தலைவர் லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள். முதலாவதாக மௌலவி முஹம்மத் அலி அவர்களின் பயன் இடம் பெற்றது . "இன்றைய முஸ்லீம் சமூகம் நோன்பு நமக்களித்திருக்கும் ஆன்மீக பயிற்சியை மீதமுள்ள வருடத்தின் நாட்களில் சரிவர பேணாதது , இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பாழாக்கும். அல்லாஹுவின் நினைவை திசைதிருப்பும் வீணான செய்லகள், சினமா மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களை நோன்பு காலங்களில் எப்படி தவிர்த்து கொண்டீர்களோ அதை உங்கள் வாழ்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் தவிர்த்தால் தான் நோன்பு உங்களுக்கு அளித்த முழுமையான பயிற்சி என்று சொல்லலாம். கெட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு க்கொண்டு பெரும் நட்டத்தை அடைந்து அதன் காரணமாக மீளா நரகம் சென்ற ஒருவன் " எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நன்மை செய்து விட்டு வருகிறேன் " என்று கூறுவான் . வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . நன்மைகளை அள்ளித்தரும் நோன்பின் மாண்பை உணர்ந்தவர்களாக , நரகத்தில் இருந்து நம்மை காத்து கொண்டவர்களாக நம்மை நாம் சீர்படுத்தி கொள்ளவேண்டும். " என்று கூறினார்

பின்னர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் பள்ளி இமாம் உரையாற்றிய குத்பா உரையின் மொழியாக்கத்தை எடுத்து கூறினார் . " எல்லா நோன்பு நாட்களிலும் பஜ்ர் தொழுகைக்கு பள்ளி நிரம்பி வழிகிறது ஆனால் நோன்பு முடிந்தவுடன் ஒரு ஸப்க்கு கூட தொழுகையாளிகள் இல்லை . பெருநாள் தருமத்தை முறையாக ஏழை எளியோர்க்கு வழங்குங்கள், நோயாளிகளை சென்று விசாரியுங்கள் , நண்பர்கள் உறவினர்கள் எல்லாரையும் சந்தித்து சலாமை தெரிவித்து உள்ளங்களை விசாலப்படுத்தி பெருநாளில் நபி வழி சுன்னாவை கடைபிடியுங்கள்."

இறுதியாக QITC யின் செயலாளர் மஸ்ஊத் அவர்களின் நன்றியுரையுடன் ஈத் பெருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை உளமார பரிமாறிக்கொண்டனர் .