ரமலான் 2008 சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 03-10-2008 அன்று " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்", என்ற மாற்று மதத்தவருக்கான சிறப்பு நிகழ்ச்சி,"கத்தர் இஸ்லாமிய கலாச்சர மையம்" FANAR உள்ளரங்கில் நடைபெற்றது.கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார்.
QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அவருடைய உரையில் ,முஸ்லீம்களின் வேதமான திருக்குர்ஆன் முஸ்லீம்கள் மட்டும் உரிமை கொண்டாவோ ,அவர்கள் மட்டும் தான் பின் பற்ற வேண்டும் என்பதில்லை,அனைத்து உலக மக்களுக்கும் நேர் வ்ழி காண்ப்பிக்க கூடியதாக் இருக்கிறது.மேலும் உங்களுடைய இஸ்லாமிய நண்பர்களின் பழக்கவழக்கங்கள் அவர்கள் பேணுகின்ற இஸ்லாமிய முறைகளை வைத்து இஸ்லாத்தை மதீப்பீடு செய்யவோ ,அவர்களை முன் மாதிரியாக கொள்ளவோ கூடாது. உலக முஸ்லீம்களுக்கெல்லாம் தலைவரான அல்லாஹூவின் இறுதித் தூதர் முஹம்மது நபியவர்களை மட்டும் தான் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். அவருடைய போதனைகள் மட்டும் தான் பின் பற்ற தகுதியான்து,என்று கூறினார்.
தமிழகத்திலிருந்த வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள். அந்நிகழ்ச்சியில் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் மாற்று மத சகோதரர்கள் தொடுத்த கேள்விகளுக்கு உரிய ஆதாரங்களுடனும் தெளிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்கள். இதில் மாற்று மத பெண்களும் பல கேள்விகள் கேட்டு தெளிவுப்பெற்றனர். கத்தரில் இது போன்ற மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எத்தி வைக்கக்கூடிய நிகழ்ச்சிகள் மிக அரிதாக நடை பெறுகிறது.
ஓவ்வரு சகோதரர்களும் தங்களுடைய ஒரு மாற்று மத அன்பர்களை கொண்டு வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு கீழ் படிந்தவர்களாக , தங்களால் இயன்ற தவாவை செய்து அரங்கத்தை முழு வதும் நிரம்ப செய்தனர்.
ஓவ்வரு சகோதரர்களும் தங்களுடைய ஒரு மாற்று மத அன்பர்களை கொண்டு வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு கீழ் படிந்தவர்களாக , தங்களால் இயன்ற தவாவை செய்து அரங்கத்தை முழு வதும் நிரம்ப செய்தனர்.
இதில் மாற்று மத தொழில் அதிபர்கள் உயர் அலுவலர்கள் மேலும் பல தொழிலாளர் குடிஇருப்பு வளாகத்திளிருந்தும் தமிழ் அறிந்த நண்பர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். கேள்வி கேட்ட அனைத்து நபர்களுக்கும் " குற்றச்சாட்டுகளும் பதில்களும்" என்ற நூலும் சிடிக்களும் இலவசமாக வழங்கப்பட்டது.குர் ஆனை நாங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி கேட்ட மாற்று மத அன்பர்களுக்கு 10க்கும் மேற்ப்பட்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது.அல்லாஹுவின் அளபெருங் கிருபையால் கத்தர் வாழ் மாற்று மத தமிழ் மக்கிளிடையே இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் எடுத்து வைத்து கத்தர் இந்தியா தவ்ஹீத் மையத்தின் தாவா பணிகள் ஊடுருவி நிற்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக !