கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவிலும் “”குர்ஆன் கூறும் வரலாற்று நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் “”நபிதோழியர்கள் வாழ்கை வரலாறு” என்ற தலைப்பிலும் சிறப்பு பயான்கள் நடந்த வருகிறது.கடந்த வார வியாழன் இரவு 24-07-2008அன்று நமது மையத்தின் அழைப்பின் பேரில் பன்மொழி இஸ்லாமிய அழைப்பு மையமான “ கத்தர் கெஸ்டு சென்டரின் ” தாயிக்களின் ஒருங்கினைப்புகுழுத் தலைவர் சகோதரர்; அப்துர்ரஹ்மான் மனாசிக் அவர்கள் வருகை தந்தார்கள். அவ்வமையம் நடந்த உபசரிப்பில் மையத்தின் நிர்வாகிகள் விருந்தினரை வரவேற்று மையத்தின் தாவா பணிகள் மற்றும் செயல்பாடுகளையும் விளக்கி கூறினார்கள்.மேலும் தஞ்சை வல்லத்தில் நடந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மக்கள் திரண்டு வந்த காட்சிகளை அவருக்கு காண்;பிக்கப்பட்டது.பின்னர் ஞஐவுஊஅரங்கில் வந்திருந்த மக்களிடம் அரபியில் தாவாவின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்.அவருடைய உரையை மையத்தின் தாயி சகோதரர் மௌலவி நஜ்முல் ஹ_சைன் மொழிபெயர்ப்பு செய்தார்.