ஏக இறைவன் திருப் பெயரால்
சீர்காழி யை அடுத்து துளசேந்திரபுரத்தை சேர்ந்த சகோதரர்க்கு சொந்தமான நிறுவனமான மில்லியனியம் கம்பெனியில் 300க்கும் மேற்பட்ட தமிழகத்ததை சேர்ந்வர்கள் பணிபுரிகின்றனர். கடந்த வியாழக்கிழமை 31-07-2008 இரவு 8:30மணியளவில் கத்தரில் மைத்தர் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள மில்லியன் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய பிரச்சாரம் நடைப்பெற்றது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்தினார்கள்.பின்னர் மையத்தின் மார்க்க பேச்சாளர் சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் ஜமாத்தாக செயல்படவேண்டிய அவசியத்தையும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி எடுத்துரைத்தார்கள். அங்கு வசிக்கும் பெரும்பாலான சகோதரர்கள் வந்திருந்து ஆர்வமுடன் மார்க்க உரையை கேட்டனர்.தவ்ஹீத் ஜமாத்தின் ஓரு கிளையாக ஆர்வமுடன் செயல்பட எல்லா சகோதரர்களும் முன் வந்தார்கள்.
மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் புதிய கிளையின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து தருமாறு கூட்டத்தில் கேட்டுக்கொண்டார் . கூட்டத்தில் ஒரு மனதாக கீழ் கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.கிளை பொறுப்பாளர் சகோதரர் இமாம் அலி (சீர்காழி)
2.து.கிளை பொறுப்பாளர் சகோதரர் இலியாஸ்(துளசேந்திரபுரம்)
3.செயற்குழு உறுப்பினர் சகோதரர் சையத் அலி(துளசேந்திரபுரம்)
4.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் ஆரிஃப் (காரைக்கால்)
5.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் சம்சுதீன் (குமராட்சி)
6.பொதுகுழு உறுப்பினர் சகோதரர் நிசாருத்தின் (துளசேந்திரபுரம்)
மேலும் மையத்தின் துணை செயலாளர் அப்துல் கபூஃர் அவர்கள் நு}லக மார்க்க புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் குறித்தும் இன்றயை நவின உலகில் நம் கைபேசியை எளிதாக மார்க்க பயான்களை கேட்கும் வகையில் வந்துள்ள தொழில்நுட்பத்தையும் விளக்கி தஞ்சை வல்ல மாநாட்டின் 18 சிடிக்களையும் நொடிப்பொழுதில் கைபேசியில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் முறையை விளக்கினார்.
மேலும் மையத்தின் துணை செயலாளர் அப்துல் கபூஃர் அவர்கள் நு}லக மார்க்க புத்தகங்கள் மற்றும் சிடிக்கள் குறித்தும் இன்றயை நவின உலகில் நம் கைபேசியை எளிதாக மார்க்க பயான்களை கேட்கும் வகையில் வந்துள்ள தொழில்நுட்பத்தையும் விளக்கி தஞ்சை வல்ல மாநாட்டின் 18 சிடிக்களையும் நொடிப்பொழுதில் கைபேசியில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் முறையை விளக்கினார்.
இறுதியாக மையத்தின் துணை செயலாளர் சபீர் அஹ்மத் அவர்கள் மையத்தின் உறுப்பினர் படிவத்தை அனைவரும் பூர்த்தி செய்து அங்கத்தினாராக இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்.மையத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இத்துடன் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.