சனி, 20 டிசம்பர், 2008

பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா ?

பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா ?
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா? ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை! பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம். இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும். ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள். ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும். பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது. ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா? இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது. காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம். பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான். பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது. சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான். இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை. தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள். இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும். பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான். அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும். தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?
ஞானி யின் ஓ பக்கங்கள்

வியாழன், 18 டிசம்பர், 2008

கத்தர் கெஸ்டு சென்டரில் சிறப்பு நிகழ்ச்சி






கடந்த வெள்ளிக்கிழமை 12-12-2008 அன்று கத்தர் கெஸ்டு சென்டரில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கத்தர் கெஸ்டு சென்டரின் தமிழ் பிரிவு தாயீ சகோதரர் மௌலவி முனாப் அவர்கள் தலைமை தங்கினார்கள் . தமிழகத்திலிருந்து வருகை தந்த அப்பாஸ் அலி அவர்கள் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கமளித்தார்கள் . இறுதியாக கத்தர் கெஸ்டு சென்டரின் தலைவர் , நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத சகோதரர்களுக்கு இலவச இஸ்லாமிய நூல்கள் அடங்கிய அன்பளிப்பு பேழையினை வழங்கினார்.

இரத்தத் தான முகாம்











சென்ற வியாழக்கிழமை 11-12-2008 அன்று கத்தரில் இரத்த தானா முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டுகளை கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் இணைந்து நடத்தியது. மதியம் இரண்டு மணி முதல் தொடங்கிய இம் முகாமில் , இரத்த தானம் செய்ய முதலாவதாக பெண்கள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் வருகை தந்திருந்தனர் . பின்னர் ஐந்து மணிக்கு மேல் , தோகாவின் அனைத்து பகுதிகளிலுருந்தும் குறிப்பாக ,
அல் மில்லியன் கேம்ப் சகோதரர்கள் , அல் கோர் கிளை சகோதரர்கள் , ராஸ்லபான் கிளை சகோதரர்கள் , நஜ்மா கிளை சகோதரர்கள் , வக்ரா கிளை சகோதரர்கள் , பின் மெஹ்மூத் கிளை சகோதரர்கள் , நியூ தோஹா ஏர்போர்ட் கிளை சகோதரர்கள் , மேலும் ரய்யான் , உம்சளால்அலி , சனையா ஆகிய பகுதிகளிளுருந்தும் இந்திய இலங்கையை சேர்ந்த பல தன்னார்வ தொண்டுள்ளம் மிக்க சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் . இம்முகாமில் பல மாற்று மத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குருதி கொடைகொடுத்த இச்சகோதரர்களுக்கு அல் குரான் தமிழ் மொழி பெயர்ப்பு இலவசமாக வழங்கப்பட்டது . நூறுக்கு மேல் பட்ட சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஐம்பதுக்கு மேற்ப்பட்ட சகோதரர்கள் இரத்த தானம் செய்தனர் .
சமுதாய சேவையில் என்றும் அல்லாஹுவின் அருளால் QITC யின் பணிகள் கத்தர் வாழ் மக்களிடையே சிறந்து விளங்க பிரார்த்திப்போமாக.

புதன், 10 டிசம்பர், 2008

QITC 2009 காலண்டர்





நமது மையத்தின் சார்பாக , அழகாக வடிவமைக்கப்பட்ட QITC 2009 காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. விலை ஒரு ரியால் மட்டுமே. தேவை படுவோர் தொடர்புகொள்ளுங்கள் , அலுவலக தொலைபேசி 4315863 மற்றும் கைபேசி எண் 6480040

திங்கள், 8 டிசம்பர், 2008

தியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம்


கத்தரில் இன்று ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மால் அருகே அமைந்துள்ள ஈத்ஹா பள்ளியில் பெருநாள் தொழுகைக்கு ப்பின்னர் , QITC மர்கஸ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் , தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் " தியாக திருநாளில் உறுதிமொழி எடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். ' இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஹஜ் , குர்பானி போன்ற வழிபாடுகளை செய்யுமாறு இறைவன் வலியுறுத்துகிறான் . ஆனால் இதை அறியாத பலர் ஹாஜி என்ற பட்டத்தை பெறுவதற்காக ஹஜ் செய்கிறார்கள் , பெருமைக்காக குர்பானி கொடுக்கிறார்கள். நபி தோழர்களின் அரும் பெரும் தியாகங்களில் தான் இஸ்லாம் வளர்ந்து நிற்கிறது .இது போன்ற தியாகங்களை செய்யா விட்டாலும் குறைந்தது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழ்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த தியாக திருநாளில் நாம் உறுதி மொழி எடுப்போம் ' என்று தனது உரையில் அப்பாஸ் அலி கூறினார் . இந்நிகழ்ச்சிக்கு மர்கஸ் துணை தலைவர் சகோதரர் முஹம்மத் யூஸுப் தலைமை தாங்கினார் . செயலாளர் சகோதரர் மஸ் ஊத் அவர்கள் மர்கஸ் ஏற்பாடு செய்துள்ள " இரத்த தானம் " பற்றி அறிவிப்பு செய்து விட்டு நன்றி யுரை கூறினார் . நிகழ்ச்சி துவாவுடன் நிறைவேறியது. ஏராளமான தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் இதன் மூலம் பயனடைந்து , தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

சனி, 6 டிசம்பர், 2008

ஹஜ் பெருநாள் சொற்பொழிவு (அழைப்பு)


FANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற்பொழிவு





வெள்ளிக்கிழமை 5-12-2008 அன்று இரவு FANAR உள்ளரங்கில் தியாக திருநாளையொட்டி சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றது. மையத்தின் துணை தலைவர் சகோதரர் முஹம்மது யூஸுப் அவர்கள் தலைமை தாங்கினார். முதலாவதாக சகோதரர் நஜுமுல்ஹுசைன் அவர்கள் "ஹஜ் பெருநாள் ஒரு பார்வை " என்ற தலைப்பில் உரையாற்றினர் . பின்னர் " இஸ்லாமும் இன்றைய தலைமுறையும் " என்ற தலைப்பில் சகோதரர் தவ்பிக் மதனி அவர்கள் சிறப்புரையாற்றினார். அடுத்தகட்டமாக மையத்தின் 2009 காலன்டரை TNTJ, மாநில பேச்சாளார் அப்பாஸ் அலி அவர்கள் வெளீயிட QITC அழைப்பாளர் டாக்டர் அகமது இப்றாகிம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளார் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள் " அல்லாஹ் நமகளித்த அருட் கொடைப் பற்றி விசாரிக்கப்படும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் QITC மர்கஸில் நடைபெற்ற மூன்று மாத கொள்கை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சகோதரர்கள் சையத் முஹம்மத், முஹம்மத் அஸ்வி, அப்துர்ரஹீம், முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகிய நால்வருக்கு சான்றிதழ்களும், மாதந்தோறும் நடத்தப்பெறும் மார்க்க அறிவுப்போட்டிகளில் 2007 – 2008 ம் ஆண்டில் முதல் மூன்று நிலையில் தேற்சிபெற்ற சகோதரி ஜியா சித்தாரா, சகோதரி கதீஜத்துல் நூரியா, சகோ.முஹம்மத் ஃபகுருதீன் அலீ ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.இறுதியாக‌ துணை செயலாளர் ஷபிர் அஹமத் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி துஆ வுடன் நிறைவேறியது





வெள்ளி, 5 டிசம்பர், 2008

உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்







இன்று 05-12-2008 பின் மெஹ்மூத் ஜும்ஆ பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குக்பின் மார்க்க பேச்சாளர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள்
" உங்களை நீங்களே நாசப்படுத்தி கொள்ளாதீர்கள்! " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
முஸ்லிம்கள் , புகை பிடித்தல் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாதல் போன்ற பழக்கங்களிருந்து தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் , இஸ்லாம் நமக்கு கற்று க்கொடுக்கும் அறிவுரைகள் என்ன என்பதை தெளிவாக எடுத்து கூறினார்கள்.
பெருந்திரளான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு உரையை கேட்டனர்.

வியாழன், 4 டிசம்பர், 2008

ஈதுல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சிகள் - 2008





அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்ணியமிக்க கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகளே !

இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து தியாக திருநாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தரில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யபட்டிருகின்றன .

தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்பாஸ் அலி M.I.SC அவர்கள் பல தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள் .

தோஹா , அல்கோர் , ராஸ்லாபான் ,சனையா ஆகிய இடங்களில் மார்க்க சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருகை தந்து பயனடைந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம் . இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் காண்க .

புதன், 3 டிசம்பர், 2008

வாராந்திர சிறப்பு சொற்பொழிவு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
இன்ஷா அல்லாஹ் நாளை கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு .
சிறப்புரை : அப்பாஸ் அலி M.I.SC
நேரம் : இரவு 7:30 மணி முதல் - 9:30 வரை
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு .
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் .

திங்கள், 1 டிசம்பர், 2008

கத்தரில் தியாக திருநாளை முன்னிட்டு இரத்த தானா முகாம் .



ஏக இறைவனின் திருப்பெயரால்

"
ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ". ( அல் குர் ஆன் 5:32 )
கத்தர் வாழ் அன்பு சகோதர சகோதிரிகளே !
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக !

தியாக திருநாளை முன்னிட்டு
கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் Hamad Medical Corporation னும் இணைந்து மாபெரும் இரத்த தானா முகாமை நடத்தவிருக்கின்றது.
இன்ஷா அல்லாஹ்
நாள் : 11-12-2008
இடம் : QITC மர்கஸ்
வியாழக்கிழமை மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை
மனித உயிரை காக்கும் இம்மனித நேயமிக்க செயலில் ஆர்வமுடன் பங்குகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

வெள்ளி, 28 நவம்பர், 2008

தியாக திரு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்



அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ் )

இன்ஷா அல்லாஹ் ,

தியாக திரு நாள் ஈதுல் அத்ஹாவை முன்னிட்டு கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருகின்றன. கத்தர் வாழ் தமிழ் முஸ்லீம் சகோதர சகோதிரிகள் தவறாமல் வந்து கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



செவ்வாய், 7 அக்டோபர், 2008

கத்தரில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்





























ரமலான் 2008 சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 03-10-2008 அன்று " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்", என்ற மாற்று மதத்தவருக்கான சிறப்பு நிகழ்ச்சி,"கத்தர் இஸ்லாமிய கலாச்சர மையம்" FANAR உள்ளரங்கில் நடைபெற்றது.கத்தர் இந்திய தவ்ஹீத் மைய‌த்தின் செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார்.

QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அவ‌ருடைய‌ உரையில் ,முஸ்லீம்களின் வேதமான திருக்குர்ஆன் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும் உரிமை கொண்டாவோ ,அவ‌ர்க‌ள் மட்டும் தான் பின் ப‌ற்ற வேண்டும் என்ப‌தில்லை,அனைத்து உல‌க‌ மக்க‌ளுக்கும் நேர் வ்ழி காண்ப்பிக்க கூடிய‌தாக் இருக்கிற‌து.மேலும் உங்களுடைய‌ இஸ்லாமிய‌ நண்ப‌ர்க‌ளின் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் பேணுகின்ற இஸ்லாமிய‌ முறைக‌ளை வைத்து இஸ்லாத்தை ம‌தீப்பீடு செய்ய‌வோ ,அவ‌ர்க‌ளை முன் மாதிரியாக‌ கொள்ளவோ கூடாது. உல‌க‌ முஸ்லீம்க‌ளுக்கெல்லாம் த‌லைவரான‌ அல்லாஹூவின் இறுதித் தூத‌ர் முஹம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் தான் முன் மாதிரியாக‌க் கொள்ள வேண்டும். அவ‌ருடைய‌ போத‌னைக‌ள் ம‌ட்டும் தான் பின் பற்ற த‌குதியான்து,என்று கூறினார்.

தமிழகத்திலிருந்த வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள். அந்நிகழ்ச்சியில் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் மாற்று மத சகோதரர்கள் தொடுத்த கேள்விகளுக்கு உரிய ஆதாரங்களுடனும் தெளிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்கள். இதில் மாற்று மத பெண்களும் பல கேள்விகள் கேட்டு தெளிவுப்பெற்றனர். கத்தரில் இது போன்ற மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எத்தி வைக்கக்கூடிய நிக‌ழ்ச்சிக‌ள் மிக அரிதாக நடை பெறுகிறது.

ஓவ்வரு சகோதரர்களும் தங்களுடைய ஒரு மாற்று மத அன்பர்களை கொண்டு வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு கீழ் படிந்தவர்களாக , தங்களால் இயன்ற தவாவை செய்து அரங்கத்தை முழு வதும் நிரம்ப செய்தனர்.

இதில் மாற்று மத தொழில் அதிபர்கள் உயர் அலுவலர்கள் மேலும் பல தொழிலாளர் குடிஇருப்பு வளாகத்திளிருந்தும் தமிழ் அறிந்த நண்பர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். கேள்வி கேட்ட அனைத்து நபர்களுக்கும் " குற்றச்சாட்டுகளும் பதில்களும்" என்ற நூலும் சிடிக்களும் இலவசமாக வழங்கப்பட்டது.குர் ஆனை நாங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி கேட்ட மாற்று ம‌த அன்பர்களுக்கு 10க்கும் மேற்ப்பட்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது.‌அல்லாஹுவின் அளபெருங் கிருபையால் கத்தர் வாழ் மாற்று மத தமிழ் மக்கிளிடையே இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் எடுத்து வைத்து கத்தர் இந்தியா தவ்ஹீத் மையத்தின் தாவா பணிகள் ஊடுருவி நிற்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக !

புதன், 1 அக்டோபர், 2008

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்












அல்லாஹுவின் பெருங்கிருபையால் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு ஈத் பெருநாள் அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டி , " அலி பின் அலி அல் முஸ்ஸல்மாநி ஈத்கா பள்ளியில் " முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். இமாமின் குத்பா உரைக்கு பின்னர் தமிழில் சிறப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . QITC யின் துணை செயலாளர் ஷபீர் அவர்கள் முன்னிலையில் , தலைவர் லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள். முதலாவதாக மௌலவி முஹம்மத் அலி அவர்களின் பயன் இடம் பெற்றது . "இன்றைய முஸ்லீம் சமூகம் நோன்பு நமக்களித்திருக்கும் ஆன்மீக பயிற்சியை மீதமுள்ள வருடத்தின் நாட்களில் சரிவர பேணாதது , இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பாழாக்கும். அல்லாஹுவின் நினைவை திசைதிருப்பும் வீணான செய்லகள், சினமா மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களை நோன்பு காலங்களில் எப்படி தவிர்த்து கொண்டீர்களோ அதை உங்கள் வாழ்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் தவிர்த்தால் தான் நோன்பு உங்களுக்கு அளித்த முழுமையான பயிற்சி என்று சொல்லலாம். கெட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு க்கொண்டு பெரும் நட்டத்தை அடைந்து அதன் காரணமாக மீளா நரகம் சென்ற ஒருவன் " எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நன்மை செய்து விட்டு வருகிறேன் " என்று கூறுவான் . வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . நன்மைகளை அள்ளித்தரும் நோன்பின் மாண்பை உணர்ந்தவர்களாக , நரகத்தில் இருந்து நம்மை காத்து கொண்டவர்களாக நம்மை நாம் சீர்படுத்தி கொள்ளவேண்டும். " என்று கூறினார்

பின்னர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் பள்ளி இமாம் உரையாற்றிய குத்பா உரையின் மொழியாக்கத்தை எடுத்து கூறினார் . " எல்லா நோன்பு நாட்களிலும் பஜ்ர் தொழுகைக்கு பள்ளி நிரம்பி வழிகிறது ஆனால் நோன்பு முடிந்தவுடன் ஒரு ஸப்க்கு கூட தொழுகையாளிகள் இல்லை . பெருநாள் தருமத்தை முறையாக ஏழை எளியோர்க்கு வழங்குங்கள், நோயாளிகளை சென்று விசாரியுங்கள் , நண்பர்கள் உறவினர்கள் எல்லாரையும் சந்தித்து சலாமை தெரிவித்து உள்ளங்களை விசாலப்படுத்தி பெருநாளில் நபி வழி சுன்னாவை கடைபிடியுங்கள்."

இறுதியாக QITC யின் செயலாளர் மஸ்ஊத் அவர்களின் நன்றியுரையுடன் ஈத் பெருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை உளமார பரிமாறிக்கொண்டனர் .

மாபெரும் இப்தார் விருந்து






கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜைதா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பள்ளிவளாகத்தில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் கத்தர் செம்பிரை அமைப்பும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள்
தலமையேற்று நடத்தினார்கள். கத்தரின் பல பாகங்களிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . அந்நிகழ்வின் போது தேவி என்கிற மற்றுமத சகோதரி இஸ்லாத்தை தழுவினர். அவருக்கு மௌலவி தவ்பிஃக் மதனீ அவர்கள் கலிமா மொழிந்து மர்யம் என்று பெயர் சூட்டினார் . மக்ரிப் தொழுகைக்கு பின்னர் உணவுக் குழு அனைவருக்கும் உணவை பரிமாறினார்கள் . அத்திடலில் தவ்ஹீத் புத்தக கண்காட்சியும் அமைக்கப் பட்டிருந்தது . ஏராளமானோர் புத்தம் புதிய தலைப்புகளில் வந்திருந்த நூல்களை வாங்கி சென்றனர். இம்மாபெரும் இப்தார் விருந்திற்கு முக்கிய உதவி நல்கியோர் Qatar Red Crescent, Qatar Charity மற்றும் Eid Bin Charity ஆகிய நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார் செயலாளர் மஸ்ஊத். மேலும் ஒலி ஒளி ,அரங்க அமைப்பு , மற்றும் புத்தக கண்காட்சி யை சிறப்பாக செய்திருந்த தன்னார்வ சகோதரர்களுக்கு நன்றி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் , வெற்றியாக்கி தந்த எல்லா வல்ல இறைவனுக்கும் நன்றி நவின்றார் . அல்ஹம்துலில்லா !

திங்கள், 29 செப்டம்பர், 2008

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


சனி, 27 செப்டம்பர், 2008

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு


அஸ்ஸலமு அலைக்கும்

கத்தர் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !

இன்ஷா அல்லாஹ் ஈத் பெருநாள் அன்று தொழுகைக்கு பின்னர்

பெருநாள் சிறப்பு சொற்பொழிவு

இடம் : மால் எதிரில் அமைந்துள்ள அலி பின் அலி அல் முஸ்ஸல்மானி

பள்ளியில்.

தலைமை : சகோதரர் லியாகத் அலி ( தலைவர் QITC)

பெருநாள் குத்பா உரையின் தமிழாக்கம் : மௌலவி முஹம்மத் அலி M.I.SC;

சிறப்பு உரை : மௌலவி தவ்பிக் மதனீ

கத்தரில் கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லீம் சமூகம், இனிய இந் நாளில் ஒரே இடத்தில் கூடி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பினை பெற அனைவரும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் திரண்டு வாரீர் !!