அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், 28/06/2013 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில், பிற மத சகோதரர்களின் கட்டுரைப்போட்டியில் வென்ற முதல் மூன்று கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும், அதனையொட்டி வருகை தந்திருந்த பிறமத சகோதரர்களுக்கான "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் செயலாளர் சகோதரர் முஹ்ம்மது அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி, பின் மண்டல தலைவர் சகோதரர் மஸ்ஊத் அவர்களை தலைமையேற்று நடத்தி தருமாறு கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும், சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் இஸ்லாம் எப்படி பேணச்சொல்கிறது என்றும் மண்டலத்தலைவர் மஸ்ஊத் அவர்களின் சிறிய அறிமுகத்துடன், கேள்வி பதில் நிகழ்ச்சியை மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹம்மத் தமீம் MISc அவர்கள் தொடங்கினார்கள்.
மிக விறுவிறுப்பாக இரண்டு மணி நேரம் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், இன்றைய கால சூழலுக்குகேற்ப சிறப்பான கேள்விகள் கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சகோதரர் தமீம் அவர்கள் அழகான முறையில், ஆழமான பதிலை புதிய கண்ணோட்டத்துடன் நன்றாக புரியும்படி எடுத்துரைத்தார்கள்.
வாரத்தில் ஒரு நாள் விடுமுறையில் தங்களுடைய பொழுதுபோக்கினை ஒதுக்கி வைத்துவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள கத்தாரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற மத சகோதரர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
அரங்கம் முழுவதும் பிற மத சகோதரர்களால் நிறைந்திருந்தது. நம் சகோதரர்களை அரங்கத்தின் வெளியே அகண்ட திரை அமைக்கப்பட்டு புரோஜக்டர் மூலம் நிகழ்ச்சியை காண எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இருநூறூக்கும் மேல்பட்ட சகோதரர்களும் சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியை சகோதரர் முஹம்மது அலி அவர்கள் தொகுத்து வழங்கினார். "இஸ்லாம் என் பார்வையில்" கட்டுரையில் முதலாவது பரிசு வென்ற சகோதரர் சந்திர போஸ் அவர்களுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கினார் மண்டலத்தலைவர் மஸ்ஊத்.
இரண்டாவது பரிசு வென்ற சகோதரர் அருள் முருகன் அவர்களுக்கு டாபெலெட் பரிசாக வழங்கினார் மண்டல அழைப்பாளர் முஹம்மது தமீம்.
மூன்றாவது பரிசாக சாம்சங் போனை சகோதரர் விஸ்வனாதனுக்கு சகோதரர் கோட்டக்குப்பம் அப்துல் வதூத் அவர்கள் வழங்கினார்கள்.

கட்டுரைப்போட்டியில் பங்கு பெற்ற சகோதரர்களுக்கு 16 திருக்குர் ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக பல் வேறு தலைப்புகளில் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது. வருகை தந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் உணவு பரிமாரப்பட்டது.
துணைச்செயலாளர் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்ச்சி பெரும் பொருட் செலவில்லாமல் எளிய முறையில் நடைபெற்றது. எனினும் அல்லாஹுவின் உதவியால் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக உருவெடுத்தது. அல் ஹம்துலில்லாஹ்!